அரசியல்

“மம்தாவை தாக்குங்கள்...” - மேற்கு வங்க பாஜக தலைவரின் வன்முறை பேச்சு... குவியும் கண்டனங்கள் !

மம்தாவை கன்னத்தில் அறையுங்கள் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“மம்தாவை தாக்குங்கள்...” - மேற்கு வங்க பாஜக தலைவரின் வன்முறை பேச்சு... குவியும் கண்டனங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

2024 மக்களைவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறது. மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை தாக்கியும் பேசி பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் அரசியல் நாகரிகம் அறிந்து பல கட்சிகளும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக தனது எல்லையை மீறி பேசி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, கன்னத்தில் அறையுங்கள் என்று அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் பேசியுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்த அவரது பேச்சுக்கும் தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது.

“மம்தாவை தாக்குங்கள்...” - மேற்கு வங்க பாஜக தலைவரின் வன்முறை பேச்சு... குவியும் கண்டனங்கள் !

அந்த வீடியோவில், “உங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது, பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டால் அவர்கள் எந்த பதிலும் கூற மாட்டார்கள். உடனே நீங்கள் அந்த குழந்தைகளை அடித்து, பள்ளியில் என்ன படித்தீர்கள் என்று கேட்பீர்கள். இனி உங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அடியுங்கள். ஏனெனில், அவர்தான் மொத்த கல்வி சிஸ்டத்தையே அழித்துவிட்டார்" என்று முதலமைச்சர் என்றும் பாராமல் பாஜக தலைவர் சுகந்தா வன்முறையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோவானது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநிலத்தில் பாஜக நடத்திய பேரணி ஒன்றில் அவர் மக்களிடம் பேசும்போது எடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

“மம்தாவை தாக்குங்கள்...” - மேற்கு வங்க பாஜக தலைவரின் வன்முறை பேச்சு... குவியும் கண்டனங்கள் !

மேலும் ஒரு பெண்ணுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக பாஜகவினர் பேசி வருவதாகவும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா, “மேற்கு வங்க பாஜக தலைவரும், எம்.பி-யுமான சுகந்தா மஜும்தார், முதல்வர் மம்தாவுக்கு எதிராக உடல் ரீதியான வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பகிரங்கமாக ஒரு உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

இது மிகவும் வெட்கக்கேடான செயல் மட்டுமின்றி, பாஜக-வின் அழிவையும் இது காட்டுகிறது. பாஜக-வின் இந்த ஆணாதிக்கமிக்க தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பலரும் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜக தலைமை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories