அரசியல்

"ராமர் கோயிலை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் எண்ணம் முறியடிக்கப்பட்டது" - அமைச்சர் சேகர் பாபு!

ராமர் கோயில் திறப்பை வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படத்த நினைத்த பாஜக, ஒன்றிய அமைச்சரின் எண்ணம் முறியடிக்கப்பட்டது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

"ராமர் கோயிலை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் எண்ணம் முறியடிக்கப்பட்டது" - அமைச்சர் சேகர் பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தற்போது இராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இராமர் கோயில் திறப்பு விழாகடந்த 22-ம் தேதி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பாஜக அரசு இந்த கோயிலை அரசியலுக்காக திறக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து இந்த நிகழ்வை புறக்கணித்தன.

இப்படியான சூழலில் தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் விதமாக 'தினமலர்' நாளிதழ் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டது. அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும், இராமர் பெயரில் அன்னதானம் வழங்கவும் அனுமதி மருத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உண்மையா? பொய்யா? என்று கூட ஆய்வு செய்யாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இவரது பதிவை தொடர்ந்து இந்த போலியான வதந்தியை பாஜகவினர் பரப்பிய நிலையில் இந்த குற்றச்சாட்டு போலியானது என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவும் கண்டனம் தெரிவித்ததோடு, உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்றும் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அதே போல ஆளுநரும் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவிலுக்குச் சென்று, பிரார்த்தனை செய்தபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குத் தெரியாத பயம் மற்றும் பயத்தின் உணர்வு இருந்தது" என்று கூறி அவதூறு பரப்பினார்.

"ராமர் கோயிலை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் எண்ணம் முறியடிக்கப்பட்டது" - அமைச்சர் சேகர் பாபு!

ஆனால், ஆளுநர் கருத்துக்கு பதிலளித்த கோதண்டராமர் திருக்கோவில் பட்டாசரியர் மோகன், "யாரும் எங்களை ஒன்றும் அச்ச படுத்தவில்லை.ஆளுநரின் பாதுகாப்பு படி தான் நாங்கள் நடந்துக் கொண்டோம்"என்று கூறி ஆளுநரின் பொய் கருத்தை அம்பலப்படுத்தினார்.

இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பை வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படத்த நினைத்த பாஜக, ஒன்றிய அமைச்சரின் எண்ணம் முறியடிக்கப்பட்டது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராமர் கோயில் திற்பபு விழா அன்று தமிழ்நாட்டில் 3 திருக்கோயில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளோம்.

ராமர் கோயில் விவகாரம் அவதூறு பரப்பியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வின்போது ஒரு சில பகுதியில் திருக்கோயில் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர், ஒரு சில பகுதிகளில் அவர்கள் வீட்டு சொத்து போல அனுமதி இல்லாமல் திருக்கோயில் வாலகத்தில் எல்.இ.டி திரை வைத்து ஒளிப்பரப்பு செய்தனர். தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பிய நாளிதழ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளோம்.ராமர் கோயில் திறப்பின் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படத்த நினைத்த பாஜக, ஒன்றிய அமைச்சரின் எண்ணம் முறியடிக்கப்பட்டது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories