அரசியல்

திருவள்ளுவருக்கு காவி உடை : தமிழ்நாடு ஆளுநர் ரவியை விமர்சித்து வரும் தமிழக மக்கள் !

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த புகைப்படத்தை பதிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளுவருக்கு காவி உடை : தமிழ்நாடு ஆளுநர் ரவியை விமர்சித்து வரும் தமிழக மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காமவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாது அக்கட்சியில் அரசமைப்பின் உயர் பதவிகளில் உள்ள பலரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திருவள்ளுவரை "சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” என்ரு குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

குறள் நெறி நம் வழி!

குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில், ”வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல உருட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம்.

அதற்குக் காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

திருவள்ளுவருக்கு காவி உடை : தமிழ்நாடு ஆளுநர் ரவியை விமர்சித்து வரும் தமிழக மக்கள் !

மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “திருவள்ளுவர் யார், அவர் என்ன போதித்தார் என்பதை விட்டு விடுங்கள், அது உங்களுக்கு புரியாது. தமிழ் நாட்டு மக்கள் அதை பார்த்து கொள்வார்கள். ஆளுநர் முதலில், சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு தனது பதிலை கூறட்டும். இது மோடி/சங்கராசாரியார்கள்/ சனாதனம்-சர்ச்சையை திசை திருப்பும் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories