அரசியல்

”நாடாளுமன்ற தேர்தல் - ஹிட்லர் போல் நடந்து கொள்ளும் பா.ஜ.க” : சரத்பவார் கடும் தாக்கு!

ஹிட்லர் போல் பா.ஜ.க நடந்து கொள்கிறது என சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

”நாடாளுமன்ற தேர்தல் - ஹிட்லர் போல் நடந்து கொள்ளும் பா.ஜ.க” : சரத்பவார் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் இன்னும் சில மாதங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க கூட்டணியும், இந்தியா கூட்டணியும் தங்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

அதேநேரம் இந்தியா கூட்டணியின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் IT,ED போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது.

தற்போது கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்ய ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது எல்லாமே இந்தியா கூட்டணியைப் பார்த்து பா.ஜ.க அச்சத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இந்நிலையில் ஹிட்லர் போல் பா.ஜ.க நடந்து கொள்கிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் பேசினார். அப்போது, "இந்தியாவில் பா.ஜ.கவுக்கு தற்போது சாதகமான சூழ்நிலை இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஹிட்லருடைய பிரச்சார அமைப்பைப் போன்று பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி இல்லை. இங்கு எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories