அரசியல்

மணிப்பூர் டு மஹாராஷ்டிரா: 6700 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி- வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட 'பாரத் ஜோடோ நீதி ' நடைப்பயணத்துக்காக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிப்பூர் டு மஹாராஷ்டிரா: 6700 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி- வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
Ravi Choudhary
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்த யாத்திரை காங்கிரஸ்க்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியான இமாச்சல பிரதேசம், கர்நாடகா போன்ற இடங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்த முக்கிய காரணமாகவும் இருந்தது. அதோடு காங்கிரசுடன் சேராமல் இருந்த பிராந்திய காட்சிகளை காங்கிரஸோடு கூட்டணி வைக்க செய்யும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

மணிப்பூர் டு மஹாராஷ்டிரா: 6700 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி- வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த யாத்திரை ராகுல் காந்தி மீதான பயத்தை பாஜகவுக்கும் மோடிக்கும் ஏற்படுத்தியது. இதன் வெற்றியை தொடர்ந்து ராகுல் காந்தி இரண்டாம் கட்டமாக இந்தியாவின் கிழக்கு - மேற்கு பகுதியை ஒருங்கிணைக்கும் அளவு நடைபயணம் மேற்கொள்வார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட 'பாரத் ஜோடோ நீதி' நடைப்பயணத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட 'பாரத் ஜோடோ' நடைபயணம் ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடங்கும் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து, அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த நடைபயணம் தேர்தலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories