அரசியல்

இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... இஸ்லாமியர்கள் பெயரில் போலி மெயில் அனுப்பிய இந்துத்வ அமைப்பு !

இஸ்லாமியர்கள் பெயரில் போலி மெயில் உருவாக்கி இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்துத்வ அமைப்பை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... இஸ்லாமியர்கள் பெயரில் போலி மெயில் அனுப்பிய இந்துத்வ  அமைப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத வழிபாடுகளில் தலையிட்டு வருகிறது. அந்த மதத்தை சார்ந்த கோவில்களை இடித்தும் வருகிறது. மேலும் சிறுபான்மையினர் மீது விஷமத்தை பரப்பி, மத கலவரங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்கள் பெயரில் போலி கணக்கை உருவாக்கி இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 இந்துத்வ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அங்கே இராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாஜகவின் அதிகாரத்தால் அங்கே இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... இஸ்லாமியர்கள் பெயரில் போலி மெயில் அனுப்பிய இந்துத்வ  அமைப்பு !

இன்னும் 4- 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இராமர் கோயிலை திறந்து ஒரு மதத்தை சார்ந்த மக்களிடம் ஒரு நிலைப்பாட்டை புகுத்த பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழலில் இந்த கோயிலுக்கும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் டிஜிபி அதிகாரிக்கு கடந்த டிசம்பர் 27-ம் தேதி இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் இராமர் கோயில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்றும், உ.பி முதல்வர் ஆதித்யநாத் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பான நிலையில், இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... இஸ்லாமியர்கள் பெயரில் போலி மெயில் அனுப்பிய இந்துத்வ  அமைப்பு !

அப்போது அந்த மெயில் ‘alamansarikhan608@gmail.com’ மற்றும் ‘zubairkhanisi199@gmail.com’ என்ற 2 இஸ்லாமியர்கள் பெயரில் இருந்துள்ளதால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மெயில் விவோ மற்றும் சாம்சங் ஆகிய மொபைல்களில் இருந்து உருவாக்கப்பட்டதை டெக்னிகள் டீம் கண்டறிந்தனர்.

தொடர்ந்து டெக்னாலஜியை பயன்படுத்தி மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறிந்தனர். அவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் பெயர் தாஹர் சிங், ஓம் பிரகாஷ் மிஸ்ரா என்று தெரியவந்தது. மேலும் இந்துத்வ ஆதரவு அமைப்பான பாரதிய கிஷன் மன்சா, பாரதிய கௌ சேவா பரிஷத் ஆகிய அமைப்புகளை நடத்தும் தேவந்திர திவாரி என்பவர் கூறியதால் இதனை செய்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்ந்து தேவந்திர திவாரியை போலீசார் தேடி வருகின்றனர். பாஜக, இந்துத்வ ஆதரவு அமைப்புகளை நடத்தும் நபர், இவ்வாறு செயல்பட்டது கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இராமர் கோயில் திறப்பு விழாவின் போது இஸ்லாமியர்களும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும் என்று RSS நிர்வாகி ஒருவர் பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories