அரசியல்

பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது கொலை முயற்சி -நடந்தது?

புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாராயணசாமி மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது கொலை முயற்சி -நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி மாநிலத்தில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலக வாயிலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு புதுவையில் ஆளும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தன் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "நேற்று இரவு ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்கனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது, தன்னையும், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோரை கொலை செய்யும் நோக்கில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூன்று ரவுடிகள் நெருங்க முயன்றனர்.

பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது கொலை முயற்சி -நடந்தது?

அவர்களை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆகையால் இந்த ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். உயிர் எங்களுக்கு பெரிதல்ல. மக்கள் நலனுக்காக எந்த நிலைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அந்த தொகுதி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி. அவர் ஆட்களை வைத்து எங்களை கொலை செய்ய முயற்சிக்கிறாரா?. இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியத்தில் மோடி, மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் எதிர்கட்சிகள் குளல்வளையை நசுக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியே அனுப்புகிறார். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் மோடி மாடல் வந்துவிட்டது. மோடி எப்படி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறாரோ, அதேபோன்று புதுச்சேரியில் மக்களுக்காக போராடும் எங்களை மிரட்டி பார்த்து, கொலை செய்துவிடுவேன் என்று சொல்லி நாங்கள் மக்கள் பிரச்சினையை பேசாமல் இருக்க வேண்டுமென பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவிட வேண்டும்." என்றார்.

பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது கொலை முயற்சி -நடந்தது?

தொடர்ந்து பேசிய அவர், "துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தன் வேலையை பார்ப்பதில்லை. புதுச்சேரிக்கு வந்து அனைத்து பணிகளையும் முடக்குகிறார். ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. கிரண்பேடி செய்த வேலையையே இவரும் செய்கிறார். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி உள்ள நிலையில், புதுச்சேரி அரசுக்கு இடையூறாக உள்ள ஆளுநர் தமிழிசையை மாற்ற சொல்லி முதல்வர் ரங்கசாமி ஒன்றிய அரசிடம் ஏன் கேட்கவில்லை?.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருகிறார். தமிழிசை சௌந்தரராஜனுக்கு அங்கு சென்று மூக்கை நுழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன?. புதுச்சேரியில் முதலில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்யட்டும், அதன்பிறகு CBSE பாடத்திட்டத்தை கொண்டுவரட்டும்.

இதனிடையே திருக்கனூர் கடை வீதியில் கத்தியுடன் சுற்றி திரிந்ததாக தமிழரசன், தினகரன் ஆகிய இரண்டு வாலிபர்களை திருக்கனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories