அரசியல்

இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு !

தெலங்கானாவில் இடைக்கால சபாநாயகராக ஓவைசியின் தம்பியும், AIMIM கட்சி நிர்வாகியான அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டுள்ளதால், பதவி ஏற்காமல் பாஜக எம்.எல்.ஏ புறக்கணித்துள்ளனர்.

இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா என்ற தனி மாநிலம் கடந்த 2014- ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இதையடுத்து அப்போது நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 2018- தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெற்று 2 முறை ஆட்சியில் இருந்தது.

இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற அம்மாநில 3-வது சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 64 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பிடித்து ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் BRS கட்சி 39 இடங்களையும், பாஜக வெறும் 8 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியது.

இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு  !

தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக, காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி பதிவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து 2 பெண்கள் உட்பட 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து நேற்று அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. இதில் எம்.எல்.ஏ -வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்க்கும் பதவி பிரமாணம் செய்யப்பட்டது.

அப்போது சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால சபாநாயகராக யாராவது இருக்க வேண்டும். அந்த வகையில் சீனியர் அடிப்படையில் தெலங்கானாவில் இடைக்கால சபாநாயகராக (pro-tem Speaker) ஓவைசியின் தம்பியும், AIMIM கட்சி நிர்வாகியான அக்பருதீன் ஓவைசி (Akbaruddin Owaisi) நியமனம் செய்யப்பட்டார். இவர் சந்திரயான்குட்டா என்ற தொகுதியில் 1999 முதல் 2023 வரை, 8 முறை நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு  !

அக்பருதீன் ஓவைசி இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இருப்பினும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த அக்பருதீன் ஓவைசி முன்பு, மற்ற கட்சி புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று கொண்டனர். ஆனால் இதற்கும் கடும் எதிர்ப்புகள் தெரிவித்ததோடு, சட்டசபையை அவமதிக்கும் வகையில், பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக புறக்கணித்தது.

இஸ்லாமிய கட்சியை சேர்ந்த ஒருவர் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றதற்கு, பாஜகவை சேர்ந்த ராஜா சிங் எம்.எல்.ஏ தலைமையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதனை புறக்கணித்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் தெலங்கானாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் காங்கிரஸ் கட்சி தரப்பில் நியமிக்கப்படும் சபாநாயகர் முன்னிலையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories