தமிழ்நாடு

“உயிரை பணயம் வைத்து பணி செய்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்...” - Deccan Chronicle பாராட்டு!

உயிரை பணயம் வைத்து பணி செய்ததாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆங்கில நாளிதழ் டெக்கான் கிரானிக்கல் (Deccan Chronicle) பாராட்டு தெரிவித்துள்ளது.

“உயிரை பணயம் வைத்து பணி செய்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்...” - Deccan Chronicle பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இந்த புயல் கனமழை காரணமாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் வசிக்கும் மக்கள் பலரும் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதோடு புயல் அன்று 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, மக்களுக்கு தேவையானவை இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 3, 4 ஆகிய தேதிகளில் இடைவிடாமல் அதி பயங்கர கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

“உயிரை பணயம் வைத்து பணி செய்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்...” - Deccan Chronicle பாராட்டு!

அந்த கனமழையும் பொருட்படுத்தாமல், மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், திமுகவினர், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் மக்களுக்கு தேவையானவை வழங்க முன் வந்தனர். மழையுடனும் களத்தில் இறங்கிய அவர்கள், இரவு, பகல் என்றும் பாராமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்தனர். மேலும் அந்தந்த தொகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் கடந்த 3 - 4 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்டிருந்த மின் விநியோகம், அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

“உயிரை பணயம் வைத்து பணி செய்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்...” - Deccan Chronicle பாராட்டு!

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாக உயிர் சேதங்களும் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த புயல் மழையிலும், களத்தில் நின்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் நின்று தங்கள் பணியை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து தற்போது வரை அமைச்சர் பெருமக்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானவை செய்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“உயிரை பணயம் வைத்து பணி செய்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்...” - Deccan Chronicle பாராட்டு!

இந்த நிலையில் உயிரை பணயம் வைத்து பணி செய்ததாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆங்கில நாளிதழ் டெக்கான் கிரானிக்கல் (Deccan Chronicle) பாராட்டு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு சிறப்பானது என பாராட்டியுள்ளது.

மேலும் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளது. புயலுக்கு பின்னர், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்று பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உயர்மின்னழுத்த கோபுரம் பழுதடைந்ததாகவும், இதனால் எண்ணூர், மணலி, மீஞ்சூர் மற்றும் சில இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும், படகில் ஏறிச்சென்று, உயரமான கோபுரத்தின் மீது ஏறி தங்களது உயிரை பணயம் வைத்து பழுது நீக்கி மீண்டும் மின்சாரத்தை வர வழைத்ததாக டெக்கான் கிரானிக்கல் குறிப்பிட்டுள்ளது.

எண்ணூர், மீஞ்சூர் மற்றும் மணலியின் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உயர்மின் வழித்தட கோபுரங்கள், மிச்சாங் புயல் பாதிப்பிலிருந்து உடனடியாக சரி செய்யப்பட, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்த முன்னேற்பாடுகள்தான் எனவும் பாராட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories