அரசியல்

“உங்களுக்கான அதிகாரம் இவ்வளவுதான்...” - பட்டியலிட்டு ஆளுநர் ரவிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநர் RN ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை டிச 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

“உங்களுக்கான அதிகாரம் இவ்வளவுதான்...” - பட்டியலிட்டு ஆளுநர் ரவிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார். தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலிலும், ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்.

இதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், அரசு நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு, கடந்த 31-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 198 பக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

“உங்களுக்கான அதிகாரம் இவ்வளவுதான்...” - பட்டியலிட்டு ஆளுநர் ரவிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

இந்த வழக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும், கால தாமதம் குறித்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் ஆளுநரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பு சட்டம் 200-ன் படி ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. தொடர்ந்து ஆளுநர் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. மேலும் ஆளுநரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பு சட்டம் 200-ன் படி ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

தொடர்ந்து ஆளுநர் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. அதோடு ஆளுநரின் செயல் ஜனநாயகத்துக்கு ஆபத்தனது என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஆளுநர் தீயுடன் விளையாடுவதாகவும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

“உங்களுக்கான அதிகாரம் இவ்வளவுதான்...” - பட்டியலிட்டு ஆளுநர் ரவிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து பயந்த ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா உள்ளிட்ட10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றுவதற்காகச் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் கடந்த நவ.18ம் தேதி நடைபெற்று, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மசோதாக்களை நிலுவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்துள்ளதாகவும், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் தடையாக இருப்பதாகவும், I Withhold assent என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதாகவும், இதனால் அதனை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

“உங்களுக்கான அதிகாரம் இவ்வளவுதான்...” - பட்டியலிட்டு ஆளுநர் ரவிக்கு மீண்டும் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

தொடர்ந்து வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் "நவம்பர் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பின், 2 நாட்கள் கழித்து அதாவது 13ஆம் தேதி ஆளுநர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். 2 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார். வழக்கு தொடரும் வரை ஏன் தாமதம் செய்தார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, "அரசியல் சாசன பிரிவு 200-ன்படி ஆளுநருக்கு மூன்று நடவடிக்கைகள்தான் எடுக்க முடியும். ஒப்புதல் வழங்குவது, திருப்பி அனுப்புவது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது. ஆனால் எந்த முடிவும் எடுக்காமல் மசோதக்களை ஆளுநர் எப்படி வைத்திருக்க முடியும்?" என்று கேட்டுள்ளார்.

மேலும் "சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள 10 மசோதாக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என்பதை ஆளுநர் தெரிவிக்க வேண்டும். மேலும் தற்போது முடிவு எடுக்காமல் உள்ள மசோதாக்கள் குறித்தும் வரும் 29 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்." என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories