அரசியல்

கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை : சிக்கிய ஒன்றிய அமைச்சரின் மகன் - நடவடிக்கை எடுக்குமா அமலாக்கத்துறை ?

ஒன்றிய அமைச்சரின் மகன்தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மாற்றக் கோரி, தனது முகவரிடம் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை : சிக்கிய ஒன்றிய அமைச்சரின் மகன் - நடவடிக்கை எடுக்குமா  அமலாக்கத்துறை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சராக இருப்பவர் நரேந்திர சிங் தோமர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தஹ் இவரின் மூத்த மகன் தேவேந்திர பிரதாப் சிங். அங்கு வரும் 17-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது.

இந்த சூழலில், தேவேந்திர பிரதாப் சிங் ராஜஸ்தான் மற்றும் மொஹாலியைச் சேர்ந்த சுரங்க மற்றும் நிலத் தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மாற்றக் கோரிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியான வீடியோவில், தேவேந்திர பிரதாப் சிங் தனது முகவரிடம் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் இதுகுறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் பியூஷ் பாபலே, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கட்சியுடன் ரூ.39 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.18 கோடி பெறப்படுவதாகவும், மேலும் ரூ.21 கோடி பின்னர் வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.தேவேந்திர பிரதாப் சிங் தோமரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர் மொரேனா கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த வீடியோ உண்மையானது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories