அரசியல்

உலக பட்டினிக் குறியீட்டை கேலி செய்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!

உலக பட்டினிக் குறியீட்டைக் கேலி செய்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக பட்டினிக் குறியீட்டை கேலி செய்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் 2023ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியானது. இதில் இந்தியா 111வது இடத்தை பிடித்தது. மேலும் கடந்த ஆண்டு 107வது இடத்திலிருந்து இந்த ஆண்டு111வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது.

இந்நிலையில் உலக பட்டினிக் குறியீட்டை ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இரானி, "உலக பட்டினிக் குறியீடுகள் எப்படி எடுக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் 140 கோடி மக்களில் 3000 பேரிடம் தொலைபேசியில் அழைத்து உணக்கு பசிக்கிறதா? என கேட்டு பட்டினிக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

டெல்லியிலிருந்து நான் காலை 4 மணிக்கு கிளம்பினேன். 5 மணிக்குக் கொச்சி விமானம் வந்தேன். பிறகு அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்து ஹைதராபாத் வந்தடைந்தேன். இப்படியான நேரங்களில் நான் உணவு சாப்பிட 10 மணிக்கு மேல் ஆகும். இப்படியோன நேரத்தில் போன் செய்து உங்களுக்குப் பசிக்கிறதா? என்று கேட்டால் நான் பசிக்கிறது என்றுதான் சொல்வேன். இப்படிதான் இப்படிதான் பட்டினிக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறது. இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பட்டினி குறியீட்டை கோலி செய்த ஸ்மிருதி இரானிக்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "உலகளாவிய பசி குறியீட்டின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளது வேதனை அளிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, போதிய உணவு விநியோகம் மற்றும் குழந்தைகள் இறப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் பா.ஜ.க அரசாங்கத்தின் திறமை குறித்து இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories