அரசியல்

பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு.. அதிக வழக்குகளோடு முதலிடத்தில் பாஜக MP,MLA-க்கள் !

பாஜகவை சேர்ந்த 22 எம்.பிக்கள், 20 எம்.எல்.ஏக்கள் மீது வெறுப்பு பேச்சுக்கான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு.. அதிக வழக்குகளோடு முதலிடத்தில் பாஜக MP,MLA-க்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் அவரது மதத்தை குறிப்பிட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு.. அதிக வழக்குகளோடு முதலிடத்தில் பாஜக MP,MLA-க்கள் !

எனினும் பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. ரமேஷ் பிதுரி மட்டுமின்றி பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் என பலரும் இதே போல வெறுப்பு பேச்சை பல மேடைகளில் பேசி வந்தனர்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த 22 எம்.பிக்கள், 20 எம்.எல்.ஏக்கள் மீது வெறுப்பு பேச்சுக்கான வழக்குகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் உள்ள 763 எம்.பி.க்களில் 33 பேரும், மொத்தமுள்ள 4,005 எம்.எல்.ஏ.க்களில் 74 பேர் மீதும் வெறுப்பு பேச்சு குறித்த வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், 74 எம்.எல்.ஏக்களில் 20 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றும், 33 எம்.பி.க்களில் 22 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அங்கு மற்றும் ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வெறுப்பு பேச்சு குறித்த வழக்குகள் இருக்கின்றன.

banner

Related Stories

Related Stories