அரசியல்

காவிரி விவகாரம்.. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு MPக்கள் குழு!

காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரை தமிழ்நாடு எம்.பிக்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சந்தித்தனர்.

காவிரி விவகாரம்..  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு MPக்கள் குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரியில் கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு தண்ணீரைப் பெற்று வருகிறது. அண்மையில் காவிரியில் தண்ணீர் தரக் கூடாது என்றும், தற்போது திறந்து விடப்பட்டு வரும் தண்ணீரையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநில பா.ஜ.க, அம்மாநில அரசுக்கு மிரட்டல் விடுத்தது.

இதையடுத்து கர்நாடகாவில் மழை இல்லாதா காரணத்தால் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வந்த நீரை கார்நாடக அரசு நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்குப் புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

காவிரி விவகாரம்..  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு MPக்கள் குழு!

இதன்படி இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய ஜல் சக்தித்துறை கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் நாங்கள் வலியுறுத்தினோம்.

கர்நாடக அரசுக்குத் தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை. 5000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளைக் கர்நாடகா அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று எடுத்துக் கூறினோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories