அரசியல்

”பிரதமர் மோடியை தொந்தரவு செய்யும் ’இந்தியா’ என்ற பெயர்” .. ராகுல் காந்தி அதிரடி பேட்டி!

டெல்லியில் நாளை நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”பிரதமர் மோடியை தொந்தரவு செய்யும் ’இந்தியா’ என்ற பெயர்” .. ராகுல் காந்தி அதிரடி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெல்ஜியத்திற்கு சென்றார்.

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவரை அழைக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. 60% இந்திய மக்கள் தொகையின் தலைவராக உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை குடியரசுத் தலைவர் வழங்கும் ஜி20 விருந்திற்கு அழைக்கப்படவில்லை.

”பிரதமர் மோடியை தொந்தரவு செய்யும் ’இந்தியா’ என்ற பெயர்” .. ராகுல் காந்தி அதிரடி பேட்டி!

காஷ்மீர் முன்னேற வேண்டும், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவறான கொள்கைகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறையில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நாம் யார் என்பதைக் குறிக்கிறது. நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் அளவுக்குப் பிரதமர் மோடியை இந்தியா என்ற பெயர் தொந்தரவு செய்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நாம் அதானி முறைகேடுகள் குறித்து பிரச்சனை எழுப்பும் போது பிரதமர் அதைத் திசை திருப்ப புதிய தந்திரங்களை வெளிப்படுத்தி வருகிறார். அதானி முறைகேடு குறித்த செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகே இந்தியா பெயர் மாற்றம் போன்ற திசை திருப்பல் நடைபெறுகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories