அரசியல்

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்து உள்ள அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் (ஞாயிற்றுகிழமை) அதிமுக பொன்விழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் அங்கே வருகை தருவத்தையொட்டி, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது காலை தொடங்கிய இந்த மாநாட்டின் நிகழ்ச்சி முடிய இரவு ஆகிவிட்டது.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

அவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் பல்வேறு சோக நிகழ்வுகளும் அரங்கேறியது. காலை முதல் இரவு வரை பல சோக சம்பவங்கள் அரங்கேறியது. பொதுமக்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பாடாய் பட்டனர். உயிரிழப்புகள், சாப்பாடு சரியில்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை என்று பல்வேறு குறைபாடுகள் மத்தியில் தற்போது அதிமுக சர்ச்சையில் சிக்கியுள்ளது. என்னென்ன பிரச்னை என்பதை பட்டியலிட்டு பார்க்கலாம்.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

1. போக்குவரத்து நெரிசல் :

இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார். ஞாயிறு கிழமைகளிலும் அலுவலகம், சுற்றி பார்க்க, 1 மாதத்திற்கு பிறகு வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டுக்கு செல்பவர்கள் என சென்ற மக்கள் பெரும் அவதிக்குள்ளானர்.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

2. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாதது :

நெல்லை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் இரு மார்க்கமாகவும் நீண்ட நேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அந்த பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் நோயாளிகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்களும், நோயாளிகளை கொண்டு செல்வதற்காக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ்களும் இதில் சிக்கி, திரும்ப அனுப்பப்பட்டது.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

3. தண்ணீருக்கு பதில் லாரியில் ஆரஞ்சு ஜூஸ் :

இந்த மாநாட்டிற்காக வருகை புரிந்த லட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அங்கே தண்ணீரும் முறையாக விநியோகிக்க படவில்லை என்பதால், அதிமுக நிர்வாகிகள், ஒரு டேங்கர் லாரியில் தண்ணீருக்கு பதிலாக ஆரஞ்சு பொடி கலந்து ஜூஸை விநியோகித்தனர்.

அந்த லாரி சுத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில், அந்த ஜூஸை அருந்திய தொண்டர்களில் சிலர் வாந்தி எடுத்தனர். இதனால் சிலருக்கு அசெளகரியம் ஏற்பட்டது. மேலும் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்று தெரிந்த போதிலும், அதற்கு தேவையான தண்ணீர் ஏற்பாடு செய்யவில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

4. வீணாய் போன 100 டன் தரமில்லா உணவு :

இந்த மாநாட்டுக்காக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்யப்ட்டிருந்தது. மதிய நேரத்தில் உணவு சாப்பிட காத்திருந்த மக்களுக்கு சாப்பாட்டில் மண்ணை அள்ளிப்போட்டது போல் தரமில்லாத உணவுகள் விநியோகிக்கப்பட்டது. புளி சாதம் உள்ளிட்ட வகை வகையான சாப்பாடு அண்டாக்களில் செய்து விநியோக்கிப்பட்ட நிலையில், அவையேதும் வேகாமல் இருந்துள்ளது.

இதனால் மக்கள் வாங்கிவிட்டு அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் பல பேர் சாப்பாடை வாங்காமலும் சென்றனர். சுமார் 100 டன் எடை கொண்ட உணவுகளை மாநாட்டுத் திடல் பந்தலில் கொட்டப்பட்டு வீணாய் போனது. இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் அந்த பகுதியில் உள்ள மக்களும் அவதிக்குள்ளானர்.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

5. ஆபத்தான பேனர்கள் :

அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை முன்னிட்டு மிகவும் கனமான கட்-அவுட் பேனர்களை ஆங்காங்கே தொண்டர்கள் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் இருந்தனர். ஆபத்தான நிலையில் வைக்கப்பட்ட கம்பிகள் பல, வாகனங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததும் நடந்தது.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

6. மாநாட்டில் 8 பேர் பரிதாப பலி :

அதிமுக மாநாட்டுக்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டும், மாரடைப்பு ஏற்படும் 8 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். மாநாட்டின் உள்ளேயே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதோடு சாலை விபத்துகளில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

8 உயிரிழப்புகள், கொட்டப்பட்ட 100 டன் உணவு, ‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதிமுக மாநாட்டின் கொடூர நிகழ்வுகள்!

7. சர்ச்சைக்குள்ளான 'புரட்சி தமிழர்' பட்டம் :

இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' பட்டம் வழங்கப்பட்டது. இதனை மதுரை நிலையூர் ஆதினம் தனது கையால் எடப்பாடிக்கு வழங்கினார். இந்த பட்டம் நெட்டிசன்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இதனை விமர்சித்தும் வருகின்றனர்.

எல்லாவற்றிக்கும் மேலாக இ.பி.எஸ்ஸுக்கு வழங்கப்பட்ட 'புரட்சி தமிழர்' பட்டத்தை வழங்கிய ஆதீனம், தனக்கும் இந்த பட்டத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தன்னிடம் என்ன பட்டம் என்று சொல்லாமலே அதிமுகவினர் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories