அரசியல்

பில்கிஸ் பானு வழக்கு: “கொடிய குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை மட்டும் விடுவித்தது ஏன்?” - நீதிபதிகள் கேள்வி!

பில்கிஸ் பானு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குஜராத் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

பில்கிஸ் பானு வழக்கு: “கொடிய குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை மட்டும் விடுவித்தது ஏன்?” - நீதிபதிகள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது" இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம்.என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும் " என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியது.

பில்கிஸ் பானு வழக்கு: “கொடிய குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை மட்டும் விடுவித்தது ஏன்?” - நீதிபதிகள் கேள்வி!

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குஜராத் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கை (Remission Policy) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொள்கை அடைப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை மட்டும் விடுவித்தது எப்படி?மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகளில் விடுவித்த போது அதே அடிப்படையில் மற்ற கைதிகளை விடுவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், கொலை, பாலியல் வன்முறை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை விடுவிக்கும் போது மற்ற கைதிகளுக்கு இந்த சட்டம் என பொருந்தவில்லை என்று கேட்டதோடு, சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதோடு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த வழக்கிற்கு தொடர்பே இல்லாத கோத்ரா நீதிமன்றத்தின் கருத்து கேட்டது ஏன்? என்று கேட்ட நீதிபதிகள், குற்றவாளிகளை விடுவிக்க சிறை ஆலோசனைக் குழு எவ்வாறு அமைக்கப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories