முரசொலி தலையங்கம்

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்ததாகச் சொல்லப்படுவது, ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கிய நாடகம் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இதுபோன்ற பல்வேறு நாடகங்களை ஜெயலலிதா நடத்தி இருக்கிறார்.

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜெயலலிதாவின் நாடகங்கள் - 1

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திடீரென்று ஜெயலலிதாமீது பாசம் வந்துள்ளது. எம்.ஜி.ஆர். பெயரை, பிரதமர் மோடி பயன்படுத்துவதும், ஜெயலலிதா பெயரை நிர்மலா சீதாராமன் உச்சரிப்பதும் அரசியல் என்பதை அனைவரும் அறிவார்கள். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்ததாகச் சொல்லப்படுவது, ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கிய நாடகம் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இதுபோன்ற பல்வேறு நாடகங்களை ஜெயலலிதா நடத்தி இருக்கிறார்.

* ''எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து பொறாமைப் படுகிறார்'' என்று ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா.

''The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life. MGR himself, who does not want to give me due importance, does not want to induce me into the Cabinet.No one here can really dare to oppose him for without him they are Zeros" – என்பது ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் சாரம் ஆகும்.

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!

''மிகுந்த செல்வாக்குடன் நான் பிரபலம் அடைந்திருப்பதைப் பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலக் காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்டத் தன்னால் முடிந்ததை எல்லாம் அவர் செய்து வருகிறார்.

எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்" என்று சொன்னவர்தான் ஜெயலலிதா. இது அப்போதே 'மக்கள் குரல்' நாளிதழில் ஜெயலலிதாவின் அழகான கையெழுத்தில் வெளியாகி இருக்கிறது.

* இது எல்லாம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும். அதனால்தான், 'வேறு கட்சிக்குப் போவதற்கான வேலைகளை ஜெயலலிதா பார்த்து வருகிறார்' என்று 1984 அ.தி.மு.க. பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். பேசினார். (ஆதாரம் 22.1.1985 ‘அண்ணா’ நாளிதழ்)

* தன்னைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமைப் படுவதாகச் சொன்ன ஜெயலலிதாதான், எம்.ஜி.ஆர். மறைவுற்ற போது, 'உடன்கட்டை ஏறிவிடலாமா என்று யோசித்தேன்' என்றும் நாடகம் ஆடினார்.

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!

* எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகி முதலமைச்சர் ஆனார். ஜானகியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. 28.1.1988 அன்று முதலமைச்சர் ஜானகி அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அன்றைய தினம் தமிழ்நாடு சட்டசபை வன்முறைக் களமாக மாற்றப்பட்டது.

ஜெயலலிதா ஆதரவாளர்கள், மைக்குகளை வீசினார்கள். சோடா பாட்டிலே சபைக்குள் வந்தது. நாற்காலிகளை உடைத்தார்கள். இந்த வன்முறைக்குப் பிறகு ஜெயலலிதா நினைத்ததைப் போல ஜானகியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

*'ஜானகிதான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷத்தைக் கலந்தார்' என்றும், 'எம்.ஜி.ஆரின் மருத்துவச் செலவுக்காக 5 கோடி வசூலித்து விட்டார்' என்றும் அவதூறுச் செய்திகளை வீசினார் ஜெயலலிதா.

* எம்.ஜி.ஆர். மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தவர்தான் ஜெயலலிதா.

* அந்தக் காலத்தில் போயஸ்கார்டன் வீட்டில் பால்கனியில் இருந்து பேசுவது ஜெயலலிதாவின் வழக்கம் ஆகும். 4.2.1988 அன்று பேசிய ஜெயலலிதா, ''சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலதிபர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தும் போது பல கோடி சிக்கியது.

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!

அது ஜானகிக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. ஆனால் ஒன்றுமறியாத பாப்பா மாதிரி அவர் பேசுவார். இந்த ஒன்றுமறியாத பாப்பாதான் நடிகை ஜெயந்தியின் வீட்டை வாங்கினார். நான் தான் எம்.ஜி.ஆருக்கே இதைச் சொன்னேன். அவர் அதிர்ச்சி அடைந்தார்" என்று குறிப்பிட்டு ஜானகியை அவமானப்படுத்தினார்.

* எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருக்கும் ஒருவர், தான் சம்பாதித்த பணத்தை அவரது அப்பா சமாதியில் வைத்து பூசி விட்டார். அதனால் அந்த சமாதியை சி.பி.ஐ. தோண்ட வேண்டும் என்று பேட்டி கொடுத்தவர்தான் ஜெயலலிதா.

* ''மூப்பனார் நடத்திய கூட்டத்தை விட எனக்கு அதிகமான கூட்டம் வந்து இருக்கிறது. இதைக் கண்டு பொறாமை கொண்ட மூப்பனார், திட்டமிட்டு போலீஸைத் தூண்டி விட்டு எங்கள் தொண்டர்களைக் காயப்படுத்தி இருக்கிறார்" என்று சொன்னவரும் ஜெயலலிதாதான். (10.4.1988 மாலை மலர்)

* திருச்சிக்குச் செல்லும் வழியில் ஜெயலலிதாவின் கார் மீது ஒரு பஸ் மோதியது. இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட போது, ''என் கார்மீது ஆம்னி பஸ் மோதியது. அந்த பஸ் உரிமையாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கு நெருக்கமான நண்பர்" என்று சொன்னவர் ஜெயலலிதா. (‘இல்லஸ்டிரேடட் வீக்லி’ - 1.5.1988)

ஜெ.வின் மறுபக்கங்கள்: நினைத்துப்பார்க்க முடியாத நாடகங்களை அரங்கேற்றிய ஜெயலலிதா.. அம்பலப்படுத்திய முரசொலி!

* 16.5. 1988 அன்று புதுக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா, ''என்னை ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து விரட்டவும், என் மீது திராவகம் வீசி ஒழித்துக் கட்டவும் ஜானகி திட்டமிட்டார்' என்று பேசினார். ஜேப்பியாரையும் அடியாட்களையும் ஏவி என்னை அடிக்கச் சொன்னார் என்று சொன்னார் ஜெயலலிதா. ( மாலை முரசு 16.5.1988)

* 1988 ஆம் ஆண்டு இரண்டரைக் கோடி தேர்தல் நிதி வசூலித்திருப்பதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். உடனே ஜெயலலிதா, 1.50 கோடி வசூலித்ததாக பொய் சொன்னதாக வும், உண்மையில் வசூலானது 40 லட்சம்தான் என்றும் அவரோடு இருந்த முன்னாள் அமைச்சரே பேட்டி கொடுத்தார். ஜெயலலிதாவின் உண்மை முகத்துக்கும் குணத்துக்கும் இது ஒரு உதாரணம்.

- தொடரும்

banner

Related Stories

Related Stories