அரசியல்

நிர்மலா சீதாராமனுக்கு ஜெயலலிதா பற்றி என்ன தெரியும் ? அப்போது ஓரமாக நின்றவர் EPS -திருச்சி சிவா MP தாக்கு!

தாங்கள் செய்த சாதனையயை கூறி பேசாமல் திமுக வை குறிவைத்து பேசுகிறார் பிரதமர் என திருச்சி சிவா MP விமர்சித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு ஜெயலலிதா பற்றி என்ன தெரியும் ? அப்போது ஓரமாக நின்றவர் EPS -திருச்சி சிவா MP தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இப்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்ட தொடர் முடிவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எழுப்பட்ட பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிக்கல் நீடித்தது.டெல்லி மாநில அதிகாரம் தொடர்பாக விவாதங்கள் எழுப்பட்டது. ஆனால், மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியிலும் ஒன்றிய அரசு 3 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எந்த விளக்கத்தையும் மக்களவையில் ஒன்றியரசு தரவில்லை. எங்களுடைய கோரிக்கை எல்லாம் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்துவிட்டு பிரதமர் விரிவான அறிக்கை மூலம் விளக்கம் தர வேண்டும் என்பது தான்.ஆனால் பிரதமர் அவைக்கு வரவில்லை.விளக்கமும் இல்லை.நாடாளுமன்றத்திற்கு வந்து அலுவலகத்தில் இருக்கிறார் ஆனால் அவைக்கு வர மறுக்கின்றார். பிரச்சினைகள் நடைபெற்று வரும் மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க ,மத்தியிலும் ஆட்சியில் இருப்பதும் பா.ஜ.க ஆனால் தீர்வுகள் காணப்படவில்லை, மாதங்கள் உருண்டோடி கொண்டுள்ளது,

அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அவரின் பொறுப்புணர்வை அறிந்து செயல்பட வேண்டும்.ஒரு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு அன்றைய தினமே நிறைவேறிய சரித்திரம் இல்லை.ஒரே மசோதாவில் 42 சட்டங்களை திருத்தியுள்ளனர்.நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவை எல்லாவற்றையும் மாற்ற முடியும். ஆனால் மணிப்பூரில் கலவரத்தினால் பறி போகும் உயிர்களை என்ன செய்ய முடியும் நினைத்து பாருங்கள்.

மணிப்பூரில் இன்னமும் கலவரம் நடந்து வருகின்றது ,மக்கள் உயிருக்கு அச்சப்பட்டு காடுகளில் பதுங்கி வாழ்கின்ற சூழல் நிலவுகிறது. இரண்டு மணி நேரம் பிரதமர் அவையில் பேசினார், ஆனால் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக சில நிமிடங்களே பேசினார்.

தாங்கள் செய்த சாதனையயை கூறி பேசாமல் எதிர்கட்சிகளை குறிவைத்து குறிப்பாக திமுக வை குறிவைத்து பேசுகிறார் பிரதமர். இன்றைக்கு இந்திய அளவில் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார் நம் முதல்வர். சிதறி கிடந்த கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். அது தான் எங்களை குறி வைக்க காரணம். இந்தியா கூட்டணிக்கான பெயரை அவைகளில் சொன்னாலே ஒன்றிய அரசை சேர்ந்தவர்களும் ,பா.ஜ.கவினரும் கோபடுகின்றார்கள்.வலிமையாக ,சிறப்பான கூட்டணியாக இந்திய கூட்டணி உள்ளது. இந்திய அளவில் வியூகங்களை வகுக்கின்ற தலைவராக ஸ்டாலின் உள்ளார். வரும் காலங்களில் இன்னனும் பல வியூகங்களை வகுக்க உள்ளார், தலைவர் கலைஞரை பார்த்து பயப்படுவது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தும் பயப்படுகின்றார்கள் பா.ஜ.கவினர்.தமிழகத்தில் பா.ஜ.க நினைத்தது ஒரு நாளும் நடக்காது.முந்தைய காலங்களில் இதை நிரூபித்திருக்கிறோம்.வரும் தேர்தலிலும் நிரூப்பிப்போம்..

நிர்மலா சீதாராமனுக்கு ஜெயலலிதா பற்றி என்ன தெரியும் ? அப்போது ஓரமாக நின்றவர் EPS -திருச்சி சிவா MP தாக்கு!

இந்திய பீனல்ப்கோட், கிரினினல் ப்ரொசீஜர் கோட், எவிடென்ஸ் ஆக்ட் என்று உள்ள சட்டங்களை வாயில் நுழையாத வகையில் இந்தியில் மொழி மாற்றம் செய்கின்றனர். கேட்டால் இந்தி திணிப்பு செய்யவில்லை என கூறுகின்றார். மணிப்பூர் விவகாரங்களில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக கேள்வி எழுப்புகிறோம், பதில் சொல்ல வேண்டிய பிரதமர் நாடாளுமன்றத்திற்கே வருவதில்லை.

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்பட்டுள்ளோம்.எங்களுக்கான அதிகாரத்தை பிடுங்குகிறார்கள், அவர்களுக்கான அதிகாரத்தை அதிகபடுத்தி கொள்கிறார்கள்.ஆனால் நாங்கள் நாளை ஆட்சிக்கு வருவோம் அப்போது இந்த சட்டங்களையெல்லாம் திருத்துவோம்...

இந்த நாட்டில் ஜனநாயக விரோத பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றது,இது துடைக்க பட வேண்டும். மக்கள் இதையெல்லாம் புரிந்து கொண்டு மக்கள் விரோத பா.ஜ.க அரசை தூக்கி எறிய வேண்டும். பா.ஜ.க வினர் பொதுக்கூட்டங்களில் பேசுவது போல அவைகளில் பேசுகிறார்கள். சன்செட் தொலைக்காட்சி ஒரு தலை பட்சமாக செயல்படுகின்றது. அவையில் நடக்கும் நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்பது தான் நியதி.ஆனால் அவர்கள் ஒரு தலை பட்சமாக உள்ளது, இது தொடர்பாக பல முறை புகார் அளித்துள்ளோம்.இவை எல்லாம் சரி செய்யபட வேண்டும்.

நான் 20 வருடமாக நாடாளுமன்றத்தில் உள்ளேன். இது போன்ற அராஜக போக்கை இதுவரை நான் கண்டதில்லை,இவர்கள் வந்த பிறகு தான் இப்படி நடக்கின்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவது சஸ்பெண்ட் செய்வது போன்ற அரஜாக போக்கை பா.ஜ.க வினர் கையாளுகிறார்கள்.எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்காத்துறையை வைத்து முடக்குவது வாடிக்கை. எங்களுக்கு மடியில் கணம் இல்லை. எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லட்டும். மக்கள் பார்த்து கொள்வார்கள்..

நிர்மலா சீதாராமன் 1989 காலகட்டத்தில் எங்கு இருந்தார்.அம்மையார் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லும் வரை இப்படிபட்ட ஒரு கேபினேட் அமைச்சர் இருக்கிறாரா? என்றே யாருக்கும் தெரியாது.தனது, திருமணத்திற்கு பிறகு லண்டனிலிருந்து நிர்மலா சீதாராமன் 1991 ல் தான் இந்தியாவுக்கே திரும்பினார், ஜெயலலிதாவுடன் அரசியலில் இருந்த திருநாவுக்கரசர் என்ன சொல்னார்?

எடப்பாடி பழனிச்சாமி பக்கத்தில் இருந்தது போல பேசக்கூடாது. அன்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ் ஆர் பேசட்டும், திருநாவுகரசு பேசட்டும், அன்று நடந்த பிரச்சினைகள் அன்றே பேசி தீர்க்கப்பட்டது இன்று சந்தர்பவாத அரசியலுக்கு இது போல பேசுகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பு எடுக்கப்பட்ட புகைபடத்தில் ஓரமாக நின்றவர் தான் எடப்பாடி.அதே சம்பவத்தில் தலைவர் கலைஞர் கண்ணாடி உடைக்கப்பட்டது, அவர் மீது தாக்குதல் நடந்தது. உடல் நிலை மோசமானதற்கு காரணம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories