அரசியல்

காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் -குஜராத் ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு !

குஜராத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என ஆம் ஆத்மீ கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் -குஜராத் ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சி மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் எதிர்க்கட்சி தலைவர்கள் கவலைப் படாமல் பா.ஜ.கவை எதிர்ப்பதே நோக்கம் என இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர்.

 Isudan Gadhvi
Isudan Gadhvi

இந்த நிலையில், குஜராத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என ஆம் ஆத்மீ கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி குஜராத் பிரிவுத் தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், குஜராத் மாநிலத்திலும் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் அடுத்து நடக்கும் லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவது உறுதி.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த முறை குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற முடியாது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருந்தாலும், லோக்சபா தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று இப்போதே தேர்வு செய்யும் பணிகளையும் நாங்கள் தொடங்கிவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories