அரசியல்

மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !

மணிப்பூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க சென்ற இந்தியா கூட்டணி தலைவர்களை, பெண் ஒருவர் கேள்வி கேட்பது போன்ற வீடியோவை பாஜகவினர் பரப்பி வரும் நிலையில், அது போலி என தெரியவந்துள்ளது.

மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொய் செய்தி பரப்புவதில் பாஜவினருக்கு நிகர் அவர்களே என்று கூறலாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலும், பின்னாலும் இதே வேலையாக தான் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் போலி செய்திக்கு மக்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஊழல், கஞ்சா, கொலை, கொள்ளை, பாலியல் புகார் என ஒவ்வொரு கிரிமினல் வேலைகளிலும் நாடு முழுவதும் பாஜகவினரே பெரும் குற்றம் புரிந்தவர்களாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு சூழலில் மீண்டும் பாஜகவினர் ஒரு பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். அதன்படி மணிப்பூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற இந்தியா கூட்டணி எம்.பி-களை மெய்தி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்புவது போன்ற வீடியோவை பாஜகவினர் மற்றும் இந்துத்துவ கும்பல் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது அந்த வீடியோ உண்மை என்றும், ஆனால் அதில் அந்த பெண் கேள்வி கேட்பது போன்ற தகவல்களை பாஜகவினர் வேண்டுமென்றே பொய்யாக பரப்பி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதனை கட்டுக்குள் வராமல் கண்டும் காணாதது போல் இருந்த ஒன்றிய அரசுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !

இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 2 குக்கி பழங்குடியின பெண்களை, ஆடைகளை அவிழ்த்து சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களை நேரில் காண சென்றிருந்தனர். அப்போது அங்கே பெண் ஒருவர் சந்திக்க வந்தவர்களிடம் ஆக்ரோஷமாக பேசினார்.

இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட பாஜக, இந்துத்துவ கும்பல், "ஒரு பெண்ணை வீட்டிலேயே வைத்து எரித்து கொன்றதற்கு நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்? பெண்களுக்காக வந்தீர்களென்றால் அந்த பிரச்னை நடந்து 2 வருடம் ஆகி விட்டது.. அப்போதெல்லாம் எங்கே போனீர்கள். அந்த வீடியோ வைரல் ஆனதற்கு பிறகே வந்துள்ளீர்கள் ஏன்? முதலில் வரவில்லை. உங்கள் அரசியல் ஆதாயத்திற்கு தான் வருகிறீர்கள். மோடி அரசு அனைத்தையுமே எங்களுக்கு செய்கின்றார்கள்." என்று கூறியதாக செய்திகள் வெளியிட்டு வந்துள்ளனர்.

மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !

இந்த செய்தியை உண்மை என நம்பிய பாஜக கும்பல் சற்றும் ஆராயாமல் பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இந்த வீடியோவில் அந்த பெண் பேசியதற்கும், பாஜகவினர் பரப்பி வரும் அந்த செய்திக்கும் முற்றிலும் தொடர்பு இல்லை என்று உண்மை கண்டறியும் செய்தி நிறுவனமான You Turn ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து You Turn செய்தி வெளியிட்டுள்ள தகவலில், அந்த பெண் பேசியது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் பேசியதாவது, “அரசாங்கத்தால் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஒன்றிய அரசால். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் ஏன் முன்கூட்டியே எழுப்ப முடியவில்லை. வீடியோ வைரலானதுக்கு பிறகு மட்டுமே அதைக் கொண்டு வருகிறீர்கள்? ஏன்? பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதில் என்ன அக்கறை? இந்த ஒரு வைரல் வீடியோ மட்டும் ஏன் வெளியே கொண்டுவரப்பட்டது?

இதற்கு முன்பே வயதான பெண்ணுக்கும், வயதான மூதாட்டிக்கும் இப்படி நடந்துள்ளது. செரோவைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு தன் வீட்டில் எரிக்கப்பட்டார். அந்த விஷயத்தை ஏன் வெளியேக் கொண்டுவரவில்லை. அவர்கள் முற்றிலும் குற்றத்திற்கு எதிரானவர்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் என்றால், இதை ஏன் கொண்டு வரவில்லை?

மே 3ஆம் தேதி இரவும், மே 4 மற்றும் 5ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சூராசந்த்பூரிலேயே சிக்கியுள்ளனர். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களும் அங்குள்ளனர். சூராசந்த்பூரில் மெய்தி இனப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். நாங்கள் எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். நாங்கள் பெண்கள் என்பதால் பயப்படுகிறோம். அதனால்தான் நாங்கள் எதிர்த்து நிற்கவில்லை. உங்களுக்கு ஆதாரம் தேவைப்பட்டால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள்.

மணிப்பூர் : கனிமொழி MPயை வைத்து பொய் செய்தி பரப்பிய பாஜக கும்பல்.. - ஆதாரத்துடன் அம்பலபடுத்திய Youturn !

சரியா? மெய்திகள் எப்போதாவது குக்கிகளின் வீடுகளை எரித்துள்ளார்களா? அவர்கள்தான் எங்கள் வீடுகளை முதலில் எரித்தார்கள். எங்கள் எதிர் காலத்தை நாசம் செய்ய எங்கள் வீடுகளை அழித்தார்கள். நாங்கள் அங்கே வீடு வாசலுடன் இருக்கிறோம். எங்கள் எதிர்காலத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் பெற்றோர்கள் எங்களை வளர்க்கிறார்கள், பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். என்றாவது ஒரு நாள் நாங்கள் அதிகாரிகள் ஆகி குடும்பத்தை பார்த்துக்கொள்வோம் என்னும் நம்பிக்கையில். ஒரு குடும்பத்தை வழி நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. எங்கள் பெற்றோர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதை உருவாக்கி வந்தனர். அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.

குக்கிகளின் வீட்டை மெய்திஸ் எரித்தனர் என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் இன்னும் கேட்கிறார்கள் என்றால், செயற்கைக்கோள் எதற்கு இருக்கிறது. அதில் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியும். அதை ஏன் பயன்படுத்தக்கூடாது? 89 நாட்களுக்குப் பிறகும் கூட அரசாங்கம் ஏன் இன்னும் செயல்படவில்லை?” என்று அந்த பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அந்த பெண் ஒன்றிய, மாநில பாஜக அரசை மட்டுமே குறிப்பிட்டு விளாசியது. ஆனால் அதனை அப்படியே திருத்தி அந்த பெண் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை கேள்விகள் கேட்டது போல் பாஜகவினர் சித்தரித்து வீடியோ வெளியிட்டு தங்களது வேலைகளை மீண்டும் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories