அரசியல்

”தமிழ்நாடு இந்தியிடம் மண்டியிடாது”.. வெகுண்டெழுந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்!

தமிழ்நாடு இந்தியிடம் மண்டியிடாது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

”தமிழ்நாடு இந்தியிடம் மண்டியிடாது”.. வெகுண்டெழுந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது இந்தியை திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப்பார்கிறது.

”தமிழ்நாடு இந்தியிடம் மண்டியிடாது”.. வெகுண்டெழுந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்!

தற்போது மீண்டும், எவ்வித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் 38வது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியல்ல. அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும்.

தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளுக்குப் போட்டியாக இந்தி மொழி கொண்டுவருவதாகக் கூறுவது தவறு. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் நாடு வலிமை பெறும். எந்தவித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ளுவதற்கான தேவையை உருவாக்க வேண்டும். இந்தியை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் இறுதியில் எந்த எதிர்ப்புமின்றி இந்தி ஏற்றுக் கொள்ளப்படும்" என பேசியுள்ளார். இவரின் இந்த இந்தி திணிப்பு பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;” என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது. இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories