அரசியல்

'United we stand' - பாஜகவை அகற்ற ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. பெங்களுருவில் முகாமிட்ட தேசிய தலைவர்கள் !

'United we stand' என்ற தலைப்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதால் இந்திய அரசியல் வரலாற்றில் அது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

'United we stand' - பாஜகவை அகற்ற ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. பெங்களுருவில் முகாமிட்ட தேசிய தலைவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , இடதுசாரிகள் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள் பீகார் மாநிலம் பாட்னாவில் கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில் மக்களவை தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது . இதற்காக ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் இந்த கூட்டம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு வரக்கூடிய தலைவர்களை வரவேற்கக் கூடிய வகையில், பெங்களூரில் அமைந்துள்ள தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலுக்கு வெளியே தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து அவர்களுக்கு வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

'United we stand' - பாஜகவை அகற்ற ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. பெங்களுருவில் முகாமிட்ட தேசிய தலைவர்கள் !

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வரவேற்கும் வகையில் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது United we stand என்ற தலைப்பின் கீழ் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக விழா நடைபெறும் இடங்களை சுற்றி யுனைடெட் வி ஸ்டாண்ட் என்ற தலைப்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து நாளை நடைபெறும் கூட்டத்தில் காலை 11 மணிக்கு அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி பாஜகவை எதிர்க்க எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து அடுத்த கூட்டம் நடைபெற உள்ள இடம் மற்றும் தேதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இந்தியாவில் பெங்களூரை உற்று நோக்கி காத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories