அரசியல்

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானது”.. அம்பேத்கர் மேற்கோளை சுட்டிக்காட்டிய கபில் சிபல்!

ஆளுநர் ரவியை நீக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியானதே என மாநிலங்களை உறுப்பினர் கபில் சிபல் கூறியுள்ளார்.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானது”.. அம்பேத்கர் மேற்கோளை சுட்டிக்காட்டிய கபில் சிபல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசிற்கு ஒன்றிய அரசு தொல்லை கொடுத்து வருகிறது. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசிற்குப் பெரிய இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தேவையில்லாமல் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த ஐந்து மணி நேரத்திலேயே தனது உத்தரவை ஆளுநர் திரும்பபெற்றுக்கொண்டார்.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானது”.. அம்பேத்கர் மேற்கோளை சுட்டிக்காட்டிய கபில் சிபல்!

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமைச்சர்களை நீக்கவோ, நியமிக்கவோ முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்ற அதிகாரம் கூட ஆளுநருக்குத் தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பினர்.

இப்படி தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைபட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். அவரை நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அம்பேத்கர்:“ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர்வாகி. ஆளுநர்களுக்கு நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இல்லை.”

எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் 1) இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றனர். 2. சீர்குலைவையும் தலையிடவும் செய்கின்றனர். 3) வெறுப்பைத் தூண்டுகின்றனர். ஆளுநர் ரவியை நீக்குமாறு ஸ்டாலின் கேட்பது சரியானதே" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories