அரசியல்

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்.. சரத்பவாரின் அடுத்த மூவ் என்ன?

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உட்பட 29 பேர் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அக்கட்சி கூட்டத்தின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்.. சரத்பவாரின் அடுத்த மூவ் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. சிலிண்டர், பெட்ரோல் விலை ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்டுகின்றனர். அதோடு மக்கள் மத்தியில் மத வேறுபாடை ஏற்படுத்தி மக்களை பிளவு படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனங்களை அதானி போன்றவற்றிற்கு தாரை வார்த்து கொடுத்து வருகிறது.

பாஜக ஆட்சியில் மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். பதவியில் இருந்து கொண்டு பாஜக ஒரு பாசிச ஆட்சியை நடத்தி வருவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்று நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்.. சரத்பவாரின் அடுத்த மூவ் என்ன?

அதற்கான முதற்கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைக்க, தற்போது பாஜகவின் சித்தாந்ததுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரின் பாட்னாவில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, சிபி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஜனதா தளம் என சுமார் 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக முடிந்த நிலையில், ஒன்றாக சேர்ந்து பாஜகவை முறியடிப்பதில் உறுதியோடு இருப்பதாக தெரிவித்தனர்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்.. சரத்பவாரின் அடுத்த மூவ் என்ன?

இதையடுத்து இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வரும் ஜூலை 13, 14-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், தன்னுடன் சேர்ந்து 29 எம்.எல்.ஏக்கள் சேர்த்துக்கொண்டு, பாஜக கூட்டணி அரசான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்டம் கண்டு விட்டது. அதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளை கலைக்க திட்டம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக இவ்வாறு செயல்பட்டுள்ளது.

மேலும் நேற்று விலகிய கையோடு அதில் 8 பேருக்கு உடனடியாக அம்மாநில ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது பிளவுபட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை உடைத்து, பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்.. சரத்பவாரின் அடுத்த மூவ் என்ன?

இந்த சூழலில் தற்போது மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் விலகியது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பாவர், சதாராவில் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அஜித்பவார் மற்றும் 8 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாஜக கூட்டணியில் 29 பேர் இணைந்த நிலையில், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிகழ்வு குறித்து பேசிய சரத் பவார், "எங்களது கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு விதமான முடிவை எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் எங்கள் கட்சியை சேர்ந்த இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக மோடி சொல்லியிருந்தார். இப்போது அவர்கள் பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக சேர்ந்துவிட்டதால் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டது என்பது தெரியவருகிறது. இதற்காக மோடிக்கு நன்றிசொல்ல வேண்டும்" என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories