அரசியல்

திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும்- பாஜக துணை முதல்வர் சர்ச்சை பேச்சு.. போலிஸார் அதிரடி!

திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும் என்று கூறிய பாஜக முன்னாள் துணை முதல்வர் மேல் கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும்- பாஜக துணை முதல்வர் சர்ச்சை பேச்சு.. போலிஸார் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.

திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும்- பாஜக துணை முதல்வர் சர்ச்சை பேச்சு.. போலிஸார் அதிரடி!

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். இந்த நிலையில், திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும் என்று கூறிய பாஜக முன்னாள் துணை முதல்வர் மேல் கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பெங்களூர் மல்லேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அஸ்வத் நாராயண். இவர் கடந்த பாஜக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்ததோடு துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்தார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது "அரசியலில் புதிய மாற்றம் மண்டியாவில் இருந்து தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் திப்பு சுல்தான் சித்தராமையா ஆட்சிக்கு வந்துவிடுவார். உங்களுக்கு திப்பு வேண்டுமா அல்லது சாவர்க்கர் வேண்டுமா?. திப்பு சுல்தான் வேண்டாம் என்று அனுப்பியது போல் சித்தராமையாவையும் நீங்கள் அனுப்ப வேண்டும். திப்பு சுல்தானை நஞ்சேகவுடா, ஊரிகவுடா பினிஷ் செய்தது போல் சித்தராமையாவையும் பினிஷ் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

திப்பு சுல்தானை போல சித்தராமையாவையும் கொல்லவேண்டும்- பாஜக துணை முதல்வர் சர்ச்சை பேச்சு.. போலிஸார் அதிரடி!

இவரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகாரில் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பாஜக பிரமுகர் அஸ்வத் நாராயண் மீது கொலை மிரட்டல், மதகலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories