அரசியல்

கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதிஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி (நேற்று) இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.

கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

இந்த தேர்தலில் கர்நாடகா பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி தோல்வியைத் தழுவியுள்ளார். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரான சி.டி.ரவி 2004-ம் ஆண்டு சிக்மங்களூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சாகீர் அகமதை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

பின்னர் தொடர்ந்து அதே தொகுதியில் வெற்றிபெற்றுவந்த அவர் தீவிர இந்துத்துவாதியாக தன்னை அடையாளம் காட்டி வருகிறார். இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வியூகம் வகுத்த காங்கிரஸ் கட்சி சி.டி.ரவியின் பி.ஏ-வாகவும், பா.ஜ.க மாவட்ட பொறுப்பிலுமிருந்தவருமான ஹெச்.டி.தம்மையாவை காங்கிரஸ் கட்சிக்கு இழுத்து சி.டி.ரவிக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தியது.

கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

இந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா மொத்தம், 85,054 ஓட்டுகள் பெற்று, 5,926 வாக்குகள் வித்தியாசத்தில், சி.டி.ரவியை வீழ்த்தி சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். மேலும் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட சிக்மங்களூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று பாஜக கோட்டையை நொறுக்கியுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் MLA-ஆகவே முடியாதவர்தான் தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளரா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories