அரசியல்

கர்நாடகா: வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி.. தோல்வி பயத்தில் பேரம் பேசிய பாஜக அமைச்சர்!

வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி தருவதாக பாஜக அமைச்சர் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி.. தோல்வி பயத்தில் பேரம் பேசிய பாஜக அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா: வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி.. தோல்வி பயத்தில் பேரம் பேசிய பாஜக அமைச்சர்!

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கமாக தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை தோல்வி பயத்தில் பாஜக தேர்தலுக்கு முன்பு செயல்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில வீட்டு வசதி துறை அமைச்சராக இருப்பவர் சோமண்ணா. இவர் சாம்ராஜ்நகர் தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் பலம் வாய்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிடுகிறது.

கர்நாடகா: வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி.. தோல்வி பயத்தில் பேரம் பேசிய பாஜக அமைச்சர்!

இதனால் சோமண்ணாவின் தோல்வி உறுதி எனக் கூறப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் வாபஸ் பெரும் தினத்தன்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளரிடம் வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் ரூ.50 லட்சத்தை உடனடியாக தருவதாகவும், தேர்தல் முடிந்ததும் மேலவை உறுப்பினராக்குவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ தற்போது வெளியான நிலையில், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories