அரசியல்

’பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது’ - இந்துத்துவாவை விமர்சித்த கன்னட நடிகர் கைது !

இந்துத்துவ கும்பலை விமர்சித்து ட்வீட் செய்திருந்த கன்னட நடிகர் சேத்தன் குமாரை கர்நாடக பாஜக அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது’  - இந்துத்துவாவை விமர்சித்த கன்னட நடிகர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

’பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது’  - இந்துத்துவாவை விமர்சித்த கன்னட நடிகர் கைது !

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தனது அரசின் தோல்விகளை மறைக்க பாஜக அரசு கர்நாடகாவில் மதவாத அரசியலுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஹிஜாப் சர்ச்சை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என இந்துத்துவ கும்பலால் நாளுக்கு நாள் கர்நாடகாவில் மதவாத அரசியல் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில், இந்துத்துவ கும்பலை விமர்சித்து ட்வீட் செய்திருந்த கன்னட நடிகர் சேத்தன் குமாரை கர்நாடக பாஜக அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் சேத்தன் குமார் நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் "பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா..

சத்தியமே சமத்துவம்

இந்துத்துவா பொய்களின் மீது கட்டப்பட்டது

சாவர்க்கர் அறிக்கை: ராவணனை தோற்கடித்து ராமன் அயோத்தி திரும்பிய போது தொடங்கியது இந்திய 'தேசம்' --> இது பொய்

1992ல்: பாபரி மசூதி 'இராமர் பிறந்த இடம்' —> இது பொய்

இப்போது 2023-ல்: திப்புவை 'கொன்ற' உரிகவுடாவும் நஞ்செகவுடாவும் —> இதுவும் பொய்

இந்துத்துவத்தை உண்மையால் வீழ்த்த முடியும் -> உண்மை " என பதிவிட்டிருந்தார்.

இது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளான நிலையில், இதனைப் பார்த்த பாஜக ஆதரவு இந்துத்துவ கும்பல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் நடிகர் சேத்தன் குமாரை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories