அரசியல்

"வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது" -அரசை விமர்சித்த மடாதிபதி.. வெடுக்கென மைக்கை பிடுங்கிய பாஜக முதல்வர் !

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையிலேயே மடாதிபதி ஒருவர் பாஜக அரசை காட்டமாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது" -அரசை விமர்சித்த மடாதிபதி.. வெடுக்கென மைக்கை பிடுங்கிய பாஜக முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பா.ஜ.க அமைச்சர் மாதுசுவாமி அண்மையில் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

"வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது" -அரசை விமர்சித்த மடாதிபதி.. வெடுக்கென மைக்கை பிடுங்கிய பாஜக முதல்வர் !

அதில், ”கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை. வெறும் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறோம். கர்நாடகாவில் நடப்பது அரசு அல்ல. வெறும் மேலாண்மை மட்டுமே. இன்னும் எட்டு மாதங்கள் என நாங்கள் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும், அங்குள்ள மடாதிபதிகள் தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையிலேயே மடாதிபதி ஒருவர் பாஜக அரசை காட்டமாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது" -அரசை விமர்சித்த மடாதிபதி.. வெடுக்கென மைக்கை பிடுங்கிய பாஜக முதல்வர் !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மடாதிபதி ஒருவரும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மடாதிபதி, "ஒவ்வொரு முறையும் மழை வரும் பொழுது பெங்களூர் நகரேம் வெள்ளத்தால் சூழப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஒருமுறை மழை வந்தால் எந்தெந்த பகுதியில் நீர் தேங்கும் என அதிகாரிகளுக்கு தெரியாதா? வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது அதை மசெய்து காண்பிக்க வேண்டும்" என்று முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையிலேயே கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் பொம்மை உடனடியாக வலுக்கட்டாயமாக மடாதிபதியிடமிருந்து மைக்கை பிடுங்கி, வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை இதற்கான திட்டமிட்டு நிதியை ஒதுக்கி அதுக்காக பணிகள் நடைபெற்று வருகிறது"என கோவத்தோடு கூறினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories