தமிழ்நாடு

“உனக்கு மட்டும்தான் பெத்தவங்க இருக்காங்களா ?” - அண்ணாமலையில் கேவலமான செயலை விமர்சித்த காயத்ரி ரகுராம் !

அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள்” என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

“உனக்கு மட்டும்தான் பெத்தவங்க இருக்காங்களா ?” - அண்ணாமலையில் கேவலமான செயலை விமர்சித்த காயத்ரி ரகுராம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

“உனக்கு மட்டும்தான் பெத்தவங்க இருக்காங்களா ?” - அண்ணாமலையில் கேவலமான செயலை விமர்சித்த காயத்ரி ரகுராம் !

அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் பெண் நிர்வாகி டெய்சியை, திருச்சி சூர்யா அருவருக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கண்டன குரலையும் காயத்ரி ரகுராம் எழுப்பியிருந்தார்.

இதனால் அவரை 6 மாதங்களுக்கு பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்க செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தன்மீது என்ன தவறு உள்ளது என்று தொடர்ந்து கூச்சல் போட்டு வந்த காயத்ரியை, பா.ஜ.க.வில் இருப்பவர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம்நொந்து பா.ஜ.க.வில் இருந்து மொத்தமாக விலகினார் காயத்ரி.

“உனக்கு மட்டும்தான் பெத்தவங்க இருக்காங்களா ?” - அண்ணாமலையில் கேவலமான செயலை விமர்சித்த காயத்ரி ரகுராம் !

தொடர்ந்து அண்ணாமலை குறித்தும், தமிழ்நாடு பா.ஜ.க குறித்தும் உண்மைகளை புட்டு புட்டு வைத்து வருகிறார் காயத்ரி. மேலும் அண்ணாமலை வந்த பிறகே இதுபோன்ற குற்றங்கள் வருவதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் துபாய் ஹோட்டலில் நான் ஹனிட்ராப் செய்தேன் என 150 பேருக்கு முன்னால் அண்ணாமலை தவறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப்பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.” எனத் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் தொடர்ச்சியாக பா.ஜ.க மற்றும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். நானும் உங்களுக்கு 4 புகைப்படங்களை தருகிறேன்- இரவில் நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன் மற்றும் தூங்குகிறேன் என்று வதந்திகளை பரப்புங்கள்.

அதை செய்ய உனக்கு தைரியம் இருக்கிறதா அண்ணாமலை? வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், im very sorry நான் பயப்படவில்லை.. உனக்கு மட்டும் பெற்றோர் இருப்பது போல், வேறு யாருக்கும் பெற்றோர் இல்லாதது போல் நீங்கள் கல்லூரியில் பேசிய பேச்சுக்கு மகிழ்ச்சி.

“உனக்கு மட்டும்தான் பெத்தவங்க இருக்காங்களா ?” - அண்ணாமலையில் கேவலமான செயலை விமர்சித்த காயத்ரி ரகுராம் !

அதே போல் நீங்கள் என்னை பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்களின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள்.

உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும் மற்றும் எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories