அரசியல்

”பாஜகவில் சேருங்கள், இல்லாவிட்டால் புல்டோசர் வரும்” -எதிர்கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் !

காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் சேருங்கள், இல்லா விட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”பாஜகவில் சேருங்கள், இல்லாவிட்டால் புல்டோசர் வரும்” -எதிர்கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பா.ஜ.க இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

”பாஜகவில் சேருங்கள், இல்லாவிட்டால் புல்டோசர் வரும்” -எதிர்கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் !

இதற்கு காரணம் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களே. இந்த ஊர்வலங்களில் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்ற இஸ்லாமியர் பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பி அங்கு வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இதிலும் இஸ்லாமிய வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தாமல் அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை எனக் கூறி பா.ஜ.க அரசு இடித்து தரைமட்டமாக்கியது.

”பாஜகவில் சேருங்கள், இல்லாவிட்டால் புல்டோசர் வரும்” -எதிர்கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் !

அடுத்து டெல்லியில் நடந்த வன்முறையிலும் இதே ஆயுதத்தைக் கையில் எடுத்து அங்கிருந்து இஸ்லாமியர் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடித்துள்ளது. அதுவும் உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கத் தடை விதித்தும், அந்த உத்தரவை மதிக்காமல் டெல்லி மாநகராட்சி செயல்பட்டுள்ளது. அதோடு சிறுபான்மையினரை தாண்டி தங்களை எதிர்க்கும் மாற்றுக்கட்சியினர், சாமானியர்களின் வீடுகளையும் பாஜக அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் ருதியாய் நகரில் நடந்த நகராட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த பஞ்சாயத்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் மூலம் நீதி வழங்கப்படுவதாகவும், இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் சேருங்கள், இல்லா விட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என மிரட்டல் தொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories