அரசியல்

புதுச்சேரியில் முற்றும் மோதல்.. முதல்வர் ரங்கசாமியை நேரடியாக விமர்சித்த பா.ஜ.க தலைவர் பேச்சால் சர்ச்சை!

மாநில அந்தஸ்து கொடுத்தால் மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற புரிதல் யாருக்கும் இல்லை என முதல்வர் ரங்கசாமியை மறைமுகமாகப் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் சாடியுள்ளார்.

புதுச்சேரியில் முற்றும் மோதல்.. முதல்வர் ரங்கசாமியை நேரடியாக விமர்சித்த பா.ஜ.க தலைவர் பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்ததில் இருந்தே பா.ஜ.கவினர் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களாகவே ஒன்றிய அரசின் நடவடிக்கையால் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தடைகள் போடுகிறார்கள் என வெளிப்படையாகவே முதல்வர் ரங்கசாமி ஒன்றிய அரசையும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் விமர்சித்து வருகிறார்.

புதுச்சேரியில் முற்றும் மோதல்.. முதல்வர் ரங்கசாமியை நேரடியாக விமர்சித்த பா.ஜ.க தலைவர் பேச்சால் சர்ச்சை!

இந்நிலையில், மாநில அந்தஸ்து கொடுத்தால் மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற புரிதல் யாருக்கும் இல்லை என முதல்வரை ரங்கசாமியை மறைமுகமாகப் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் சாடியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற புரிதல் யாருக்கும் இல்லை.

15 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. அதே வேலையில் மாநில அந்தஸ்து பெற்ற கோவா நிதி நெருக்கடியில் உள்ளது. யூனியன் பிரதேசமாக இருந்த போது கிடைத்த வருவாய் தற்போது அவர்களுக்குக் கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முற்றும் மோதல்.. முதல்வர் ரங்கசாமியை நேரடியாக விமர்சித்த பா.ஜ.க தலைவர் பேச்சால் சர்ச்சை!

முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்தைப் பிரதான கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல்வரின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளது பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories