அரசியல்

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

“கலைஞரை கைது செய்த போது அதை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஒட்டுமொத்த தொண்டர்களின் கோபத்தின் வெளிப்பாடுதான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக பொருளாளர் திரு. டி.ஆர் .பாலு அவர்களின்" பாதை மாறா பயணம்" நூல் வெளியீட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

முதலில் நாடாளுமன்ற உறுப்பினர், கழகப் பொருளாளர் அவர்களுக்கு என் வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு பெரிய மேடையில் பேச எனக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எவ்வளவு உயரமானவர் என்று உங்களுக்கு தெரியும் அதைவிட அவருடைய வரலாறு, பயணம் அவர் உயரத்தை விட உயரம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்த ‘பாதை மாறா பயணம்’ புத்தகம்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

கழகத்தில் எளிய தொண்டனாக 17 வயதில் தொடங்கி, கலைஞருடன் பயணித்து, இன்று தலைவர் தலைமையிலான கழகத்தில் பொருளாளராகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு பாகத்தில் 65 ஆண்டு கழகப் பயணம் குறித்து அவர் சொல்லவரும் செய்தி ‘பாதை மாறாத பாலு’ என்பதுதான்.

இந்த புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை என்னிடம் அளித்த போது, நான் அந்த புத்தகத்தை படிச்சிட்டு வர முயற்சி செய்கிறேன் என்றேன். ஒவ்வொரு பாகமும் ஆயிரம் பக்கம். இந்த புத்தகங்களை படிக்க தொடங்கினேன், படிக்கப் படிக்க இது எனக்கான பாடநூல் என உணர வைத்ததுதான் அந்த புத்தகத்தினுடைய வெற்றி, அவர்களுடைய வெற்றி.

இந்த நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம். கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு என்கிற மனிதர், அரசியல்வாதியாக அவரது அனுபவத்தை தொகுத்துக் கொடுத்துள்ளார் என நினைக்கத் தோன்றவில்லை. தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் காலச்சுவடாக வரலாறாகப் பார்க்கத் தோன்றுகிறது.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

கழகத்தின் டெல்லி முகமாக, ஒன்றிய அரசின் அமைச்சராக உலக நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவங்களைக் கூறுகையில், அவர்கள் குறிப்பிடும் வார்த்தைகள்தான் தி.மு.க என்கிற இயக்கத்தின் கொள்கையாக, பயணமாக உள்ளது.

இந்திய வரைபடத்தில் பார்த்தால், தேடிப்பார்க்கும் இடத்தில்கூட மன்னார்குடி இருக்குமா தெரியாது? அங்கிருந்து புறப்பட்டு, அங்கிருந்தும் அல்ல, அதுக்கு பக்கத்தில் இருக்கும், தளிக்கோட்டை என்கிற கிராமத்திலிருந்து புறப்பட்டு இன்று கழகத்தின் பொருளாளராகவும், டெல்லியின் தமிழக முகமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் நமக்கு எப்போது கிடைக்கும் என பெரியார் போராடினார். அரசியல் அதிகாரத்துக்கு வந்து அதைச் செய்வோம் என பேரறிஞர் அண்ணா நிகழ்த்திக் காட்டினார். அண்ணா காட்டிய வழியில் கலைஞர் கொடி நாட்டினார். இன்று தலைவர் அந்தப்பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். இப்படியாக அரசியல் அதிகாரம், ஆட்சி சாமானியர்களின் கைகளில் வந்த கதைதான், இந்த பாதை மாறாப் பயணம்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

பெரியாரின், அண்ணாவின், கலைஞரின், நம் தலைவரின் பாதையிலிருந்து மாறாத அவர்களின் பாதை மாறாப் பயணம் என்கிற இந்த நூல் இளைஞர்களுக்கான, இளைய சமூகத்துக்கான ஓர் ஆவணம். நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்களின் கம்பீரம் தான். கலைஞரை கைது செய்த போது அதை அவர்கள் எதிர்கொண்ட விதம், அந்த ஆக்ரோஷத்தைப் நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள். அன்றைக்கு இருந்த ஒட்டுமொத்த தொண்டர்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் அது. அதேபோல சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு அ.தி.மு.க எம்.பி-யைப் பார்த்து உனக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையா எனக் கேட்டவர்தான்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலைஞரின் வீடு கோபாலபுரம் இல்லம்தான். கோபாலபுரம் இல்லத்தில் பல சுவையான நினைவுகள் இருக்கின்றன. மாலை நேரங்களில் 2-வது அறையில் கலைஞர் உட்கார்ந்திருப்பார். இன்றைய கழகத் தலைவர் உட்பட பலரும் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள். அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை ஒவ்வொருவரும் சுவாரஸ்யமா பகிர்ந்து கொள்வார்கள். பிறகு தயாளு பாட்டி எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவார்கள். ஒரு குடும்பம் மாதிரி இருக்கும். அதுதான் கழகக் குடும்பம்.

அந்தக் குடும்பத்திலிருந்து வந்த அவர்கள், இந்த நூலில் கலைஞர் என்ற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்திருக்கிறார் என்று எண்ணிச் சொல்வோருக்குப் பரிசு என்று போட்டியே வைக்கலாம். அதேபோல முரசொலிமாறன் அவர்களின் பெயரையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். வெவ்வேறு இடங்களில் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவர்களுக்கு மட்டுமல்ல தனக்கு பல்வேறு தருணங்களில் உதவி செய்த பல்வேறு நபர்களை மறக்காமல் பெயர்க்குறிப்பிட்டு நன்றி சொல்கிறார். அவரின் உயரத்துக்கு இந்தப் பண்பு முக்கியமான காரணம்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

ஒவ்வொரு முறையும் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போதும், தன்னுடைய சொந்த ஊரான அந்தத் தளிக்கோட்டையையும் ராசு என்கிற தன் தகப்பனார் பெயரையும் சேர்ந்தே உச்சரிப்பார். ஊர்ப்பாசம் போகாது என்பார்களே அப்படி, தன் ஊரையும், பெற்றோரையும் பல இடங்களில் நினைவுகூர்கிறார். யார் ஒருவர் தான் ஏறிவந்த ஏணிகளை மறக்காமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் இறக்கமே கிடையாது ஏற்றம்தான் என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டு அவர்கள் தான்.

பரவாக்கோட்டை, நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை சுந்தரக்கோட்டை, உள்ளிக்கோட்டை, நல்லிக்கோட்டை என பல கோட்டைகளுக்கு மத்தியில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்த அவர்கள் இன்று டெல்லி செங்கோட்டை வரை சென்றதற்குப் பழசை மறக்காத அந்த மனசும், பெற்றோரை நினைத்துப் போற்றும் அந்த எண்ணமும், தன்னை உயர்த்திய ஏணியாக இருந்த கலைஞரையும், தலைவரையும் மறக்காத அந்த எண்ணம்தான் காரணம்.

பள்ளியில் படிக்கும்போது கல்விச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். வெகுதூரமில்லை. அங்கிருந்து நாகப்பட்டினம் கடற்பகுதி வரை. அதுதான் அவரது தொழில் சார்ந்த கனவுகளுக்கு வித்திட்டது என்கிறார். அதுதான் அவருக்கு முதல் ரயில் பயணம். நீடாமங்கலம் ரயில் நிலையத்தை வியந்து பார்த்திருக்கிறார். அப்படி வியந்த அவர்களே பிறகு ரயில்வே நிலைக்குழுவுக்குத் தலைவராகி, சென்னையிலிருந்து மன்னாடிகுடிக்கு ரயில் வசதி, தஞ்சையிலிருந்து பல ஊர்களுக்கு ரயில்கள், அகல ரயில் பாதைகள் என்று பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!
M Asokan

சொந்த ஊர் அருகில் தொடக்கப்பள்ளியில் படித்துவிட்டு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரத்தநாடு-ல் உள்ள முத்தம்மாள் சத்திரம் மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அப்போது அவரை, தி.மு.கழகத்தில் உறுப்பினராகச் சேர்கிறீர்களா’ என்று அப்பகுதி கழக நிர்வாகிகள் அணுகியுள்ளனர். அப்போதைய ஆசிரியர்கள் ஊட்டிய திராவிட இயக்க உணர்வு, பெரியார், கலைஞரின் உரைகள் இவரை இயக்கத்தில் சேர வைத்திருக்கின்றன.

‘பாலசுப்பிரமணியன்’ என்ற பெயரை சுத்தமான தமிழில் ‘இளமுருகு’ என்ற பெயரில் இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பேரறிஞர் அண்ணா கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை பெற்றுள்ளார். பிறகு சென்னை வருகிறார். அவருடைய உறவினர் செங்குட்டுவன் அவர்களுடன் இணைந்து கட்சிப்பணியாற்றுகிறார். 1969-ல் சென்னை மாவட்டக் கழக பிரதிநிதிக்கான தேர்தல் வருகிறது. ஆயிரம் விளக்கு பகுதி சார்பாக மாவட்டக் கழகத்திற்கு 6 பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

கோபாலபுரம் பகுதிப் பிரதிநிதியாக இருந்த இன்றைய தலைவர் அவர்கள் மாவட்ட பிரதிநிதி தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார். எஞ்சிய 5 பேரில் ஒருவராகத் தேர்வாகிறார். இப்படி ஒரே நேரத்தில் தலைவர் அவர்களும், பொருளாளரும் மாவட்ட பிரதிநிதிகளாகத் தேர்வாகிறார்கள். இன்று அவர் தலைவர் இவர் பொருளாளர்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

தன் உழைப்பினால் படிப்படியாக உயர்ந்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகிறார். 1986ல் நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபா எம்.பி-யாகிறார். மாவட்டச் செயலாளர்களில் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினரானவரும் அவர்கள்தான் என்பது தனிச்சிறப்பு.

மாவட்ட செயலாளராக தன்னுடைய பல பணிகள் குறித்து குறிப்பிடும் அவர்கள் ‘என் வழி தனி வழியல்ல’ என்றும் கட்சிக்குள் கோஷ்டி சேர்க்கமாட்டேன் என்றும் தலைவரின் வழிதான் தன் வழி என்றும் குறிப்பிடட்டுள்ளது, நம் ஒவ்வொருவருக்குமான பாடமாக இது அமையும்.

சென்னையின் மாவட்ட செயலாளராக அவர்கள் நடத்திய விழாக்களை, முன்னெடுத்த நிகழ்ச்சிகளை பட்டியலிட்டால் நேரம் போதாது. முத்தமிழறிஞரின் 25 ஆண்டுகால சட்டமன்றப் பணிகளை பாராட்டி வெள்ளிவிழா, பேராசிரியர் அவர்களின் மணிவிழா, கழக அமைப்புச் செயலாளர் நீல நாராயணன் அவர்களின் மணிவிழா, இப்படி பல்வேறு விழாக்களை நடத்திக்காட்டியிருக்கிறார். சென்னையில் தொண்டரணியைத் தொடங்கியதும் அவர்களின் ஒருங்கிணைப்பில் தான்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!
Shviraj

பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் சிந்திக்கும் வழியிலேயே அவர்கள் நடந்துள்ளார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். அவரது நூல்களில் குறிப்பிடும் சம்பவங்களிலிருந்து அதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நவீன உட்கட்டமைப்புத் தேவைகளை கழகம் மிக முக்கிய செயல்திட்டமாகவே கொண்டுள்ளது. அதனால்தான் தமிழகம் இன்றைக்கு அனைத்து முன்னேற்றங்களிலும் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ந்துள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும் வகையில் சர்வதேச தரத்தில், வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா பாலம், பாடி மேம்பாலம், விமான நிலையை மேம்பாலம் எல்லாம் அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள்தான். இன்னும் இன்னும் தமிழக நெடுஞ்சாலைகளில் மேம்பாலத் திட்டங்களை விவரிக்கிறபோது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு திட்டங்கள் நம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று. தமிழகத்துக்கு மட்டுமல்ல, மும்பை மக்களும் நன்றி சொல்வார்கள். மும்பையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்த “வெஸ்டர்ன் ஃபிரீவே சீ லிங்க்‘’ பாலத்துக்கு அனுமதி அளித்ததும் அவர்கள்தான்.

கழகத்துக்கென தனியாக ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என்று கலைஞர் முடிவெடுத்து அண்ணா அறிவாலய கட்டுமானப் பணி குறித்து அறிவிக்கிறார். கட்டுமானப் பணிகளை மாவட்ட செயலாளர்கள் ஏற்க வேண்டும், ஒவ்வொரு தொண்டரும் ஒரு ரூபாய் வழங்கவேண்டும் என்று சொல்கிறார். சென்னை மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் என்ற முறையில் ரூ.14 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை வசூலித்து கலைஞரிடம் வழங்குகிறார். இன்று அவருடைய புத்தக வெளியீட்டு விழாவை அதே அறிவாலயத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

தன் உழைப்பால் கட்சி, ஆட்சி என இரண்டிலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர்களின் இந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை நாம் அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அவருடைய வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. நம் இயக்கத்தின் வரலாறும்கூட. இவ்வளவு நீண்ட நெடிய பயணத்துக்குப்பிறக்கும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறார்.

இங்கு பேசிய பலரும் சொன்னார்கள் மிகவும் கண்டிப்பானவர் என்று, நூறு சதவீதம் உண்மை. என்னை குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்தவர் அவர், ஒரு வார்த்தை அதிகமாகப் பேசமாட்டார் ஆனால் சொல்ல வேண்டியதைச் சரியாக சொல்லிவிட்டுச் சென்று விடுவார். அது கலைஞராக இருந்தாலும் சரி நம்முடைய தலைவரக இருந்தாலும் சரி. அதை அருகிலிருந்து நேரில் பார்த்தவர் நான். மிகவும் கண்டிப்பானவர்.

“கலைஞரை கைது செய்தபோது TR.பாலுவின் ஆக்ரோஷத்தைப் பார்த்திருப்பீர்கள்”: மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி!

எல்லோரும் சொல்லுவார்கள் நம்முடைய தலைவர் மிக கண்டிப்பானவர், ரொம்ப பெர்ஃபக்‌ஷனிஸ்ட் என்று. ஒரு விஷயத்தை சொன்னால் அதை பின்தொடர்வதில் நம் தலைவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அனைத்து மூத்த அமைச்சர்களும் அனைத்து மூத்த கழக தலைவர்களும் நம்முடைய தலைவரைப் பார்த்து பயப்படுவார்கள். ஆனால் நம்முடைய தலைவர் ஒருவரை பார்த்து பயப்படுவார் என்றால் இவர் ஒருவர் மட்டும் தான்.

நான் அவரை' டி.ஆர்.பாலு மாமா' என அழைக்கிறேன். கலைஞர் அவர்கள் வாயால் 'பாலம் பாலும்' என அழைக்கப்பட்டவர். இங்கே துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் சொல்லித்தான் தெரியும் அவர்களுக்கு டெல்லியில் அவர் 'பாஸ் பாலு' என்று. இந்த நிகழ்ச்சியில் எனக்குப் பேச வாய்ப்பளித்த பொருளாளருக்கும், பதிப்பகத்தாருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து. இரண்டு பாகம்தான் வந்திருக்கிறது மூன்றாம் பாகத்திற்காக நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories