தமிழ்நாடு

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

“17 வயதில் அரசியலுக்குள் நுழைந்து 80 வயதிலும் ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் டி.ஆர்.பாலு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (7.01.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “பாதை மாறா பயணம்” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“கடந்த செப்டம்பர் மாதம் விருதுநகரில் நடைபெற்ற கழகத்தின் முப்பெரும் விழா, அந்த முப்பெரும் மாநாட்டில் நம்முடைய சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு கலைஞர் விருது தலைமைக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அப்போது நான் டி.ஆர்.பாலு அவர்களைப் பற்றி பேசுகிறபோது, குறிப்பிட்டுச் சொன்னேன். அவரைப் பற்றி பேசினால், நீண்டநேரம் ஆகும், பலமணி நேரம் ஆகும் என்று நான் குறிப்பிட்டேன்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

''கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? எதைச் சொல்வது? வேறு ஒன்றும் இல்லை. இது எல்லாம் கலந்த ஒருவர்தான் நம்முடைய டி.ஆர்.பாலு" - என்று நான் குறிப்பிட்டேன். இது ஏதோ வார்த்தை அலங்காரத்திற்காக சொல்லக்கூடிய சொல் அல்ல, இது நியாயமானதுதான் என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

கழகத்துக்காக - தமிழ்நாட்டுக்காக - இந்தியாவின் வளர்ச்சிக்காக - பாலு ஆற்றிய பணிகளை நான் பாராட்டுவதற்கு முன்னால் - இப்படி ஒரு புத்தகத்தை எழுதியதற்காக முதலில் பாலு அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். ஒரு செயலைச் செய்வதைப் போலவே - அதனைப் பதிவு செய்வதும் முக்கியமானது. பதிவு செய்யாமல் போய்விட்டால் அந்தச் செயல் காலத்தால் மறக்கப்பட்டு விடும், மறைக்கப்பட்டு விடும்.

நம்முடைய திராவிட இயக்கம் செய்திருக்கக்கூடிய போராட்டங்கள் - தியாகங்கள் – அந்த சாதனைகள் ஆகியவை 100 விழுக்காடு என்று சொன்னால் அதில் 50 விழுக்காடு கூட முழுமையாகப் பதிவாகவில்லை. தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் இதழ்கள் நடத்தினாரே தவிர, தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதவில்லை.

பேரறிஞர் அண்ணா பல்லாயிரம் பக்கங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தாரே தவிர தனது வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதவில்லை. நம்முடைய இனமானப் பேராசிரியர் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை. தலைவர் கலைஞர் நெஞ்சுக்கு நீதி எழுதினார், வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ஆனால் அதுவும் 2002-ஆம் ஆண்டு வரைதான் எழுதப்பட்டிருக்கிறது.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

திராவிட இயக்கத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு முழுமையாக கிடைத்திருந்தால் எவ்வளவு அரிய தகவல்கள் இந்த நாட்டுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் கிடைத்திருக்கும் என்பது தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அருமை அண்ணன் என்னுடைய ஆருயிர் அண்ணன் சிட்டிபாபு சிறை டைரி என்றொரு புத்தகத்தை எழுதினார். நெருக்கடி நிலைக் காலத்தில் நாங்கள் பட்ட கொடுமைகள், குறிப்பாக நான் வாங்கிய அடிகள், அவர் செய்த தியாகம், அந்த புத்தகம் மட்டும் இல்லையென்றால், அவைகள் எல்லாம் நமக்கு சாட்சியம் இல்லாமல் போயிருக்கும்.

என்னுடைய மதிப்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம் 'முரசொலி சில நினைவலைகள்' என்ற தலைப்பில் 100 நாட்கள் முரசொலியில் தொடர்ந்து எழுதினார்கள். அப்படி எழுதிய காரணத்தால்தான் அதன் மூலமாக 'முரசொலி' நாளிதழ் சந்தித்த அந்த தியாகத் தழும்புகளை எதிர்காலச் சமுதாயம் இன்றைக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுதான் உண்மை.

எனவே, இங்கே பேசி விடை பெற்றிருக்கக்கூடிய நம்முடைய பொதுச் செயலாளராக இருந்தாலும், நமது கழக முன்னோடிகள் யாராக இருந்தாலும் அவர்களை எல்லாம் இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது அய்யா ஆசிரியர் கூட குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

உங்களுடைய போராட்டங்களை, நீங்கள் கண்ட களங்களை, நீங்கள் செய்திருக்கக்கூடிய தியாகங்களை, நீங்கள் கழகப் பணியாற்றிய நேரத்தில் உங்களோடு பயணித்த தோழர்களுடைய பங்களிப்பைத் தொகுத்து நீங்கள் நூலாக பதிவு செய்திட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் பணிவோடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்களது வாழ்க்கைக் குறிப்புகளை நிகழ்ச்சிகளின் தொகுப்புகளைகூட ஒரு டைரி மாதிரி, ஒரு தொகுப்பு மாதிரிகூட நீங்கள் ஏழுதலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் டி.ஆர்.பாலு அவர்களின் இந்தப் புத்தகமானது அத்தகைய தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் உண்மை. இன்றைக்கு அவர் கழகப் பொருளாளராக இருக்கிறார் என்றால், தலைவர் கலைஞர் இருந்த பொறுப்பு அது. நம்முடைய பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் இருந்த பொறுப்பு அது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்த பொறுப்பு அது. அண்ணன் ஆற்காட்டார் இருந்த பொறுப்பு அது.

ஏன் நானும் அந்தப் பொறுப்பிலே இருந்திருக்கிறேன். இத்தகைய பொறுப்பை பாலு பெற்றிருக்கிறார் என்று சொன்னால், அவர் உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பிற்கு கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் அது. அதுதான் இந்தப் புத்தகமானது அமைந்திருக்கிறது. இந்த இயக்கத்தில் யாரும் உழைக்காமல் எந்த பொறுப்பிற்கும் வந்துவிட முடியாது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் அனைவரும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். அவர் பள்ளிக்கூடத்தில் படித்திருந்த காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரையைக் கேட்டு – ஒரு பள்ளி விழாவில் பேராசிரியர் அவர்களுக்கு முன்னால், 17 வயதில் மிகத் தீவிரமான அரசியலுக்குள் நுழைந்த டி.ஆர்.பாலு இன்றைக்கு, 80 வயது கடந்த நிலையிலும் ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

இந்த அறுபது ஆண்டு காலத்தில் கழகம் அடைந்த உயரமும் அதிகம், கழகம் விழுந்த பள்ளமும் அதிகம். கழகம் அடைந்த வெற்றிக்கு உழைத்த கரங்களில் பாலுவின் கரங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அவரை நான்

1970-லிருந்து அறிவேன். அவரோடு பழகிக்கொண்டிருப்பவன். அவரை இளைஞராக பார்த்தவன். இளைஞனாக பார்த்தவன் என்றால் எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். அப்போது எல்லாம் நான் பேசுகிறபோது, இப்போது வாங்க, போங்க என்று பேசுகிறேன். அவர் பொறுப்புக்கு தகுந்த மரியாதை கொடுக்கிறார். நீ, வா, என்றுதான் பேசுவோம். இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், வாயா, போயா என்று தான் பேசுவோம். இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், வாடா, போடா என்று பேசிய காலம் உண்டு. அப்படியெல்லாம், பழகி இருக்கிறோம்.

அதனை நான் 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தில் அதை குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். பாலு அவர்களும் மறக்காமல் இந்த நூலில் சொல்லி இருக்கிறார். முதன்முதலில் எனக்கு 'இளந்தென்றல்' என்ற பட்டத்தை கொடுத்தவர் டி.ஆர்.பாலுதான். அதுதான் நான் பெற்ற முதல் பட்டம். எனக்கு முதல் பட்டம் சூட்டியவர் பாலு. அந்தக் காலத்தில் அவரும் 'இளமுருகு' என்று தன்னை அழைத்துக் கொண்டார். அவருடைய அலுவலகம் ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய லாயிட்ஸ் சாலையில் இருக்கும். பெரும்பாலும் நானும் அவரும் ஒன்றாகவே இருப்போம் ஆரம்ப காலத்தில். இப்போதும் அப்படியே இருக்கிறோம், அது வேறு.

அவரது அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பதை நான் வழக்கமாக பேசிக் கொண்டிருப்போம். அப்போது வீட்டில் இருந்ததை விட அவருடைய அலுவலகத்தில்தான் அதிக நேரம் இருந்தேன். சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து போய்விடுவோம். இங்கே பகுதி, மாவட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி எல்லாம் சொன்னார்கள்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

பகுதிப் பிரதிநிதி எலெக்‌ஷனிலும் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நின்றோம். நான் மட்டும் ஜெயித்தேன். அவர் தோற்றுப் போய்விட்டார். அதையெல்லாம் அவர் மறந்திருக்க மாட்டார். அதற்குப்பிறகு அண்ணா கலைக் கழகத்தை என்ற அமைப்பை ஏற்படுத்தி இலக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்திக் கொண்டு வந்தார். அதில் என்னையும் அழைத்து பேச வைத்தார். பேச்சுப்பயிற்சி பெறுவதற்கு எனக்கு களமாக அமைந்தது அவருடைய அண்ணா கலைக் கழகம் தான். இலக்கியவாதிகள் பலரையும் அழைத்து அந்த நிகழ்ச்சியில் பேச வைத்து, இலக்கிய ஆர்வத்தை கழகத்தவரிடத்தில் அவர் பரப்பினார்.

அப்போதே அவருடைய செயல்பாடுகளின் மூலமாக, தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை பாலு மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார். மிசா காலத்தில்தான் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. மிசாவில் நான் கைது செய்யப்பட்டபோது, தலைவர், என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், கழக முன்னோடிகள் எல்லாம் என்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள் கோபாலபுரத்தில். வேனில் ஏற்றி என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

அப்போது ஆயிரக்கணக்கான தோழர்கள் என் காரை சூழ்ந்து கொண்டு, வெற்றிகொண்டான், நம்முடைய பாலு எல்லாம் வேனை மறித்தார்கள். அவரை அழைத்து கொண்டு போகாதீர்கள், விடுதலை செய்யுங்கள் கைது செய்யக்கூடாது என்று அப்போதும் வழிமறித்தவர்தான். கலைஞரை கைது செய்து விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் கொண்டு போய் விசாரித்தார்களே, எப்படி அந்த உணர்ச்சியை பார்த்தோமோ, அந்த மிசாவில் கைது செய்யப்பட்டபோது அந்த உணர்ச்சியை பாலு அவர்களிடத்தில் நான் பார்த்தேன்.

'ஸ்டாலினைக் கைது செய்ய விடமாட்டோம்' என்று முழக்கம் எழுப்பிய தீரர்தான் நம்முடைய டி.ஆர்.பாலு. மிசா காலத்தில், தலைவர் கலைஞருக்கு யார், யார் காரோட்டிகள் எல்லாம் இருந்தார்களோ, அத்தனை பேரும் மிரட்டப்பட்டு வேலையை விட்டே போயிட்டார்கள். அப்போது தலைவர் கலைஞருக்கு காரோட்டியவர்கள் கோவையைச் சார்ந்த கண்ணப்பன் அவர்களும், அடுத்தது டி.ஆர்.பாலுவும். கோவை கண்ணப்பனையும் கைது செய்து சிறையில் கொண்டு போய் போட்டார்கள். அதற்கு பிறகு முழுமையாக நம்முடைய பாலு தலைவர் கலைஞருக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தார்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

அப்படி கார் ஓடிக் கொண்டிருந்த பாலுவையும் கைது செய்து சிறையில் கொண்டு போய் அடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர் கலைஞருக்கு நீ உதவி செய்கிறாயா? முடியாது என்று கைது செய்து சிறையில் கொண்டு போய் தள்ளினார்கள். பிப்ரவரி 1ஆம் தேதி நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சென்னை சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறோம். பாலு கைதானது மே மாதம் 6-ஆம் தேதி. நாங்கள் அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்தி, பல கொடுமைகளை முடித்து - இனி யாரையும் அடிக்கப் போவதில்லை என்று போலீஸார் முடிவெடுத்த பிறகுதான் பாலு சிறைக்குள் வருகிறார்.

அப்போதும் அதிர்ஷ்டம் பாருங்கள். பாலு வரப்போகும் தகவல் எங்களுக்கு கிடைத்துவிட்டது. வரப்போகிற பாலுவை எப்படி வரவேற்பது? என்று ஒரு திட்டம் போடுகிறோம். வரவேற்க மாலையும், பூ எல்லாமா கிடைக்கவா போகிறது. கிடைக்காது சிறையில். மரத்தில் உள்ள இலைகளை எல்லாம் பறித்து, பறித்து அந்த மாலைகளை ஒரு நாரில் கட்டி எல்லோரும் சேர்ந்து சென்று பாலுவை வாங்க, வாங்க என்று மாலை போட்டு உள்ளே அழைத்துக் கொண்டு வருகிறோம். அன்றைக்கு நாங்கள் இருந்த கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறோம். காட்சியெல்லாம் நினைவுக்கு வருகிறது.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

எங்களுக்கு சிறை பழகி விட்டது. நாங்கள் போனது பிப்ரவரி 1ஆம் தேதி. அவர் 2 மாதம் கழித்து வருகிறார். ஆக, அலுமினியத் தட்டில்தான் எங்களுக்கு சாப்பாடு. அலுமினியத் தட்டு குவளையில்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவர் வந்தவுடன் அலுமினியத்தை எல்லாம் தொட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் எப்போதும் ரொம்ப perfect-ஆக இருப்பார்! இப்போதும் டிப்டாப்பாகதான் இருப்பார். அப்புறம் வயிற்றுப்பசி விடுமா அவரை. அதற்குப்பிறகு அலுமினியத் தட்டில் சாப்பிடத் தொடங்கிவிட்டார். ராயப்பேட்டையில் எப்படி ஒன்றாக இருந்தோமோ அதைப்போலவே சிறையிலும் நாங்கள் ஒரே அறையில் தங்கியிருந்தோம். மயிலை சம்பந்தம், நானும், பாலுதான் ஒரே அறையில் இருந்தோம். சிறையிலும் பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் விழா, முப்பெரும் விழா, அய்யா பிறந்தநாள், பொங்கல் விழா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, விளையாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி இப்படியெல்லாம் நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தினோம்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!
Shviraj

அதற்கு பரிசு கொடுப்பது அய்யா ஆசிரியர் தான். நம்முடைய மறைந்த மதிப்பிற்குரிய முரசொலி மாறன் எல்லாம் அழைத்து பேசவைப்போம். இந்த நேரத்தில் வெளிப்படையாக ஒன்று பேச விரும்புகிறேன். பாலு கோபித்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் இரண்டு பேரும் கூட்டத்திற்கு போவோம், எனக்கு துணையாக இவரை தான் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டத்தில் எனக்கு வழிச் செலவு கொடுப்பார்கள். அதில் பாதியை அவருக்கு கொடுத்துவிடுவேன்.

உடனே வாங்கிக்கொள்வார். மெயின் ஸ்பீக்கர் நான் தான். ஆனால் கூட வருகிற இவருக்கு எனக்கு வருகிற தொகையிலிருந்து வழிச்செலவு நான் இவருக்கு கொடுப்பேன். இதைவிட வேடிக்கை என்னவென்று கேட்டால், எனக்கு கைத்தறி ஆடையெல்லாம் போடுகிறார்களே, அதில் ஒரு சில பேர்கள், பட்டாடை என்றால், ஒரிஜினல் பட்டு அல்ல. அந்த சாட்டின் போல, மஞ்சள் கலர் இருப்பது போல அந்த மாதிரி ஆடை போடுவார்கள். அதைக்கேட்டு வாங்கிக் கொள்வார். ஏன் என்று கேட்டால், மறுநாள் சட்டை தைத்துக் கொண்டு போட்டு வருவார். அப்படியெல்லாம், நாங்கள் இணை பிரியாமல் இருந்த அந்த காட்சிகள் எல்லாம் எனக்கு நினைவு வருகிறது.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!
M Asokan

இதைவிட இன்னொரு கொடுமை நான் செகண்ட் ஹேண்டில் எலிகன்ட் பியட் 7690 MDN ஒன்று வாங்கினேன் இன்னும் அது நினைவிருக்கிறது. 5000 ரூபாய்க்கு வாங்கினேன். 5000 ரூபாய் என்பது இப்போது ஐந்து இலட்சம் ரூபாய். அது வாங்கி கொஞ்ச நாளில் விபத்து ஏற்பட்டு விட்டது. 5000 ரூபாய்க்கு வாங்கி 7000 ரூபாய்க்கு செலவு செய்தேன் அந்த வண்டிக்கு. விபத்து நடந்து, அந்த விற்றுவிடலாம் என்று முடிவு செய்தபோது அதை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். எவ்வளவு வேணும் என்ற கேட்டார். எனக்கு இலாபம் வேண்டாம்.

அசல் வந்தால் போதும். நான் வாங்கியது 5000 ரூபாய் செலவு செய்தது 7000 ரூபாய், 12000 ரூபாய் கொடுங்கள் போதும் என்று சொன்னேன். உடனே ஒத்துக்கொண்டு 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டார். அதற்குப்பிறகு அவர் அதை சுத்தமாக மறந்துவிட்டார். இரண்டு மாதம் கழித்து இன்னும் 100 ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் 2000 ரூபாய் கொடுத்திருப்பார் இதுவரைக்கும். ஆக இன்றைக்கும் அவர் எனக்கு ஒரு கடன்காரராகத்தான் இருக்கிறார். இப்படி இன்றைக்கு எங்களுடைய நட்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இதுதான் திமுக, இதுதான் கலைஞருடைய அன்பு தம்பிகள்.

இந்த நட்பானது மிசா விடுதலைக்குப் பிறகு அதிகமானது. அவர் சென்னை மாவட்டச் செயலாளராக போட்டிப் போடுகிறபோது அவருக்கு உடனிருந்து மாவட்டச் செயலாளராக வரவேண்டும் என்று நான் ஒரு அணியில் இருந்து அவரை வெற்றி பெற வைப்பதற்காக பாடுபட்ட அந்த செய்திகள் எல்லாம் நம்முடைய துரைமுருகன் பேசுகிறபோது கோடிட்டுக் காட்டினார். ஆக 1982-ல் மாவட்டச் செயலாளராக வருவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்று எல்லோரும் சொல்வார்கள். இதனையும் மறக்காமல் பாலு இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

அவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது ஆற்றிய பணிகள் எல்லாம் மறக்கமுடியாது. அன்று பாலு செயல்பட்ட விதம்தான் ஒரு மாவட்டச் செயலாளர் எப்படிச் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடையாளமாக விளங்கினார். அண்ணா நகர் இடைத்தேர்தலில் இன்றைக்கு இருக்கிற சோ.மா.ராமச்சந்திரன் அவர்தான் வேட்பாளாராக நிறுத்தப்பட்டார்.

அப்போது அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆர் முதலமைச்சர். அதிமுக எவ்வளவு அராஜகமாக ஈடுபட்டது. அந்த நேரத்தில் எல்லாம் சமாளித்து சோ.மா.ராமச்சந்திரனை வெற்றி பெற வைத்து அந்த வெற்றியைக் கொண்டு தலைவரிடம் ஒப்படைத்தபோது தலைவர் தட்டி கொடுத்து அதனுடைய அடையாளமாக ஒரு கணையாழி அணிவித்தார். மோதிரக் கையால் குட்டுப்படுவது என்பார்களே, அதைப் போல கலைஞரிடத்தில் கணையாழியைப் பெற்றவர் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள்.

கலைஞருக்கு மணிவிழா என்று சொன்னாலும், பேராசிரியருக்கு மணிவிழா என்று சொன்னாலும், கழகத்தின் சார்பில் நடைபெற்றிருக்கக்கூடிய முப்பெரும் விழாக்களாக இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி தேசிய முன்னணி தொடக்கவிழா, அந்த தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பேரணி, இவை அனைத்தும் பாலுவின் பெயரை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும். அதில் எந்த மாறுபாடும் கிடையாது. நம்முடைய பொதுச்செயலாளராக இருந்த இனமான பேராசிரியரின் மணிவிழாவைப் பெரியார் திடலில் நடத்தினோம்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

பாலு தான் மாவட்டச் செயலாளாராக முன்னின்று அதை நடத்துகிறார். 15 நாட்களாக அந்தப் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறார். அப்போது நானும் கூட இருந்து இரவோடு இரவாக கண்விழித்து அந்த வேலையெல்லாம் பார்ப்போம். அப்போது தலைவர் கலைஞர் மூன்று முறை பெரியார் திடலுக்கு வந்து ஆய்வு நடத்தினார். என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார். ஆக பாலுவோடு சேர்ந்து அந்த விழாவை எல்லாம் கவனிக்கக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றவன்.

தலைவர் கலைஞருக்கு கடற்கரையில் மணிவிழா நடந்தபோது ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடத்திக் காட்டினார், கடலுக்குள் இருந்து உதயசூரியனும் கலைஞர் உருவமும் தெரிவதைப் போல காட்சிப்படுத்தி அனைவரையும் அசத்திக்காட்டினார் டி.ஆர். பாலு.

ஏன் என்றால் அவருக்கு மீன்பிடி ஸ்டீமர் படகு இருந்தது. அந்த தொழிலில் இருந்தார். இதையெல்லாம் செய்து காட்டினார். எனது வாழ்நாளில் அடிக்கடி சொல்வேன், தேசிய முன்னணி தொடக்க விழா நடைபெற்றபோது பேரணி நடத்திய அணிவகுப்பு, அந்த அணிவகுப்பை வெற்றி பெறுவதற்காக துணை இருந்தவர் நம்முடைய டி.ஆர்.பாலு . அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.

1986-இல் மாநிலங்களவை உறுப்பினர்,

1996-இல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர்,

1998-இல் தென் மக்களவைத் தொகுதி உறுப்பினர்,

1999-இல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர்,

2004-இல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர்,

2009-இல் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்,

2019-இல் திருபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் - என 27 ஆண்டுகள் நாடாளுமன்றப் பணிகளில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

மூன்று முறை ஒன்றிய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

1996 - 1998 வரை பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1999 - 2003 வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2004 - 2009 வரை, கப்பல்துறை மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதுதான் தெரியும். ஆனால் இவை அனைத்தும் பாலுவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை மறந்துவிடக் கூடாது. இது குறித்து விரிவாக பாலு இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மாவட்ட கழகச் செயலாளராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதே மிடுக்கு கம்பீரத்தோடுதான் இருப்பார். தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டு அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலக வாசலில் உட்கார்ந்து இருந்தபோது, அந்த கேட் மூடியிருந்ததை எல்லாம் நீங்கள் டி.வியில் பார்த்திருப்பீர்கள், இங்கேயும் காணொலி காட்சியில் காண்பிக்கப்பட்டது.

எவ்வளவு வேகமாக ‘ஓப்பன் த டோர்’ என்று கர்ஜித்தார் என்று சொன்னால், இதுதான் உண்மையான கருப்பு சிவப்புத் தொண்டனாக அவர் நமக்கு காட்சி அளிக்கிறார். சிலர் அமைச்சர் பொறுப்பு இல்லை என்றால் சோர்ந்துவிடுவார்கள் - ஆனால் பாலுவின் நடை, உடை, பாவனையைப் பார்த்தால் இப்போதும் ஒன்றிய அமைச்சர்மாதிரி இருப்பார், அந்த பந்தாவோடு தான் இருப்பார்.

டில்லிக்கு போகும்போது எல்லா ஒன்றிய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற கட்சித் தலைவர்களும், பாலு, பாலு, ஹலோ, பாலு என்று சொல்வார்கள், எங்களை யாரும் சொல்லமாட்டார்கள். பாலுவைதான் சொல்வார்கள். அந்தளவுக்கு எந்தப் பணியைச் செய்தாலும் அதனை நேர்த்தியோடு, கண்டிப்போடு இருக்கக்கூடியவர்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பொறுப்பை ஏற்றபோது, கவர்மென்ட் மாதிரி மாறிவிட்டது அறிவாலயம். தினமும் காலையில் 9.45 மணிக்கு ஆபீஸ் டூட்டிக்கு வருவதைப் போல வந்துவிடுவார். ஒவ்வொரு நாளும் சென்னையில் இருக்கிறபோது அவர் அறையில் உட்கார்ந்து கட்சிப் பிரச்சனை, என்ன விசாரணை, எங்கே புகார் வருகிறது, எந்த மாவட்டத்தில் என்ன பிரச்சனை என்று விசாரித்து நான் வந்தவுடனே என்னிடத்தில் ஒப்படைப்பார். அந்த ரிப்போர்டை கொடுப்பார். ஆக எந்தப் பணியைக் கொடுத்தாலும் முத்திரைப் பதிக்கக்கூடியவர் நம்முடைய பாலு.

அதனால்தான் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே குறிப்பிட்டேன். ஒரு மாவட்டச் செயலாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பாலு ஒரு உதாரணம் என்பதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இங்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல - டெல்லியிலும் நம்முடைய பெயர் தலைநிமிர்ந்து நிற்க காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கழகத்தின் குரலை ஒலித்தவர். தமிழ்நாட்டில் ஓடும் தங்கநாற்கரச் சாலையாக அமைத்துக் கொடுத்தவர், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மேம்பாலங்கள் எல்லாம் கம்பீரமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கக்கூடியவர். அய்யா ஆசிரியர் பேசுகிற போது சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அந்த திட்டத்தை தடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க. தான் தடுத்தது.

இன்று, ''ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது" யார் சொல்கிறார், பி.ஜே.பி-ஐ சார்ந்த ஒன்றிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜிதேந்திரசிங் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காக சூலை 23-ஆம் நாளை 'எழுச்சி நாள்' என்று தமிழகம் முழுவதும் நடத்திக்காட்டினார். அதற்கு பிறகு காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தபோது, அந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென்று கலைஞர் விரும்பியபோது 2004-ஆம் ஆண்டில். 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது அன்றைய ஒன்றிய அரசு, அதனை நிறைவேற்ற முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு காரணமாக இருந்தவர் இந்த விழாவினுடைய நாயகனாக இருக்கக்கூடிய நம்முடைய பாலு அவர்கள் தான்.

இவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இந்த பதினெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ பயன்களை இந்த தமிழ்நாடு அடைந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இந்த பெருமை வந்து சேர்ந்திருக்கும். நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திருக்கும். தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகி இருக்கும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரித்திருக்கும். கடல்சார் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம் வாழ்க்கைத் தரம் பெருகிப் போயிருக்கும்.

“ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார் TR.பாலு” : முதல்வர் புகழாரம்!

இத்தனை வளர்ச்சியையும் பாஜகவும் - அதிமுகவும் தடுத்துவிட்டது. இதனை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடவேண்டும்.

இது பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம்!

தலைவர் கலைஞரின் கனவுத் திட்டம்!

அதனை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே டி.ஆர்.பாலுவின் பணி இன்னமும் தேவைப்படுகிறது. நேற்றைய தினம் முரசொலியில் கழகத்தின் தீர்மானக் குழுச் செயலாளர் அக்ரி கணேசன் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். மறைந்த சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும், அதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி டி.ஆர்.பாலு அவர்களுக்கு வழங்கப்பட்டால் கழகத் தோழர்களை காக்க அது ஆயுதமாக பயன்படும் என்று சொன்னதாகவும், உடனே தலைவர் கலைஞர் அவர்களுக்கு பதில் சொல்கிறார் 'ஆயுதமாகவே தரப்படுகிறது தென்னரசு' என்று கலைஞர் சொன்னதாகவும், அதன்பிறகுதான் டி.ஆர்.பாலு பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் அந்த விளம்பரத்தில் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனவே, தலைவர் கலைஞர் டி.ஆர்.பாலுவை ஆயுதமாக நினைத்து உங்களை டில்லிக்கு அனுப்பினார். இன்று வரையிலும் நீங்கள் ஆயுதமாகவே செயல்பட்டு வருகிறீர்கள். இன்னும் களங்கள் பாக்கி இருக்கின்றன. அதை இளமுருகுவாக டி.ஆர்.பாலு உற்சாகத்துடன் செயல்பட்டு களத்திலே நீங்கள் வெற்றிபெறவேண்டும். அதற்கு நாங்கள் பக்கபலமாக என்றைக்கும் துணை நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories