அரசியல்

“4 ஆட்டுக்குட்டி சொத்து..5 லட்ச ரூபாய் watch: ரசீதை வெளியிட முடியுமா?” -அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி கெடு!

4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென கூறும் ஒருவர், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என அண்ணாமலையை குறிப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

“4 ஆட்டுக்குட்டி சொத்து..5 லட்ச ரூபாய் watch: ரசீதை வெளியிட முடியுமா?” -அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி கெடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் ஒரு செய்தி பரவியது. அதாவது அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை சுமார் 5 லட்ச ரூபாய் என்றும், அது ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், இது குறித்து நேற்று கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், தான் ஒரு தேசியவாதி என்றும், அதனாலே ரபேல் வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

கோப்பு படம்
கோப்பு படம்

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது.

நான் ஒரு தேசியவாதி, பிரிவினைவாதி இல்லை. எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை. அதனால்தான் ரபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் இந்த வாட்சை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். உலகளவில் பார்த்தால் இதில் 500 வாட்ச்சுகள்தான் தயாரிக்கப்பட்டது. அதில், நான் கட்டியிருக்கும் வாட்ச் 149-ஆவதாகும்.

Rafale Watch - கோப்பு படம்
Rafale Watch - கோப்பு படம்

ரபேல் விமானம் நம்மிடம் வந்த பிறகு தான் போர் யுக்திகள் மாறியுள்ளன. இதன் காரணமாகவே சீனா நம்மிடம் வாலாட்டுவதில்லை. நமது பலம் அதிகரித்துள்ளது. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை ஒரு இந்தியன் தான் வாங்குவான். இது எனது தனிப்பட்ட விவகாரம். நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்" என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட பதிவில், "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

“4 ஆட்டுக்குட்டி சொத்து..5 லட்ச ரூபாய் watch: ரசீதை வெளியிட முடியுமா?” -அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி கெடு!

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று குறிப்பிட்டு கேடு விதித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories