அரசியல்

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

ஆம் ஆத்மி கண்ட மாபெ­ரும் வெற்­றியை, பி.ஜே.பி.க்கு பயந்து அல்­லது பணிந்து அடக்கி வாசித்த ஊட­கங்­கள், குஜ­ராத்­தில் பி.ஜே.பி. தக்க வைத்­துக் கொண்ட வெற்­றியை ஊதிப் பெரிது படுத்தி வரு­கின்­றன!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜ­ராத் மாநில தேர்­தல் வெற்­றி­யைக் கொண்­டாடி குதூ­க­லித்­துக் கொண்­டி­ருக்­கி­றது பா.ஜ.க.! ஏதோ எதிர்­பா­ராத வெற்­றியை பெற்று விட்­ட­து­போல ஏடு­கள் எல்­லாம் எக்­கா­ள­மிட்டு பி.ஜே.பி.யின் வெற்­றி யை புகழ்ந்து தள்­ளு­கின்­றன. ஊட­கங்­கள் பெரும்­பா­லும் பி.ஜே.பியின் ஊது­கு­ழ­லாக மாறி ராகா­லா­ ப­னம் செய்து, பல கோணங்­க­ளில் இந்த வெற்­றியை தூக்­கிப்­பி­டித்து உச்சஸ்தாதியில் இசைத்து மகிழ்­கின்­றன.

இந்த வெற்றி இப்­படி வெறித்­த­ன­ மா­கக் கொண்­டா­டப்­பட வேண்­டிய வெற்றி இல்லை என்­பதை பி.ஜே.பி.யினரே உண­ரு­வர்! இந்த வெற்றி குஜ­ராத் மக்­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்து பி.ஜே.பி.க்கு தந்த வெற்றி அல்ல; இது மக்­களை ஏமாற்றி, பல சூது­வா­து­களை நடத்தி, ஜன­நா­யக நெறி­மு­றை­க­ளைத் தகர்த்து தட்­டிப்­பறிக்­கப்­பட்ட வெற்றி என்­பதை இந்­தத் தேர்­த­லுக்கு முன்­னும், பின்­னும் நடந்­த­வை­களை கூர்ந்து கவ­னித்த அரசி­யல் நோக்­கர்­கள் அறி­வர்!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

ஒரு மாநி­லத் தேர்­த­லை நாட்­டின் பிர­த­மர் மற்­றும் உள்­துறை அமைச்­சர் ஈடு­பட்டு – பல நாட்­கள் அங்­கேயே சுற்­றிச் சுழன்று தங்­க­ளது நேர­டிக் கண்­கா­ணிப்­பில் நடத்­தி­யுள்­ள­னர்!. உலக மகா பத்து பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் இருக்­கும் அதா­னிக்­கும், அம்­பா­னிக்­கும் சொந்த மாநி­லம் அது! உல­கத்­தின் இரண்­டா­வது பெரிய பணக்­கா­ரர் கெள­தம் அதானி. அந்த இடத்தை பி.ஜே.பி.யின் கடாட்­சத்­தால் பெற்­ற­வர் என்­பதை உலகே அறி­யும்! நன்­றிக்­க­டன் செலுத்த அவர் அங்கு கிடைத்த வழியெல்­லாம் புகுந்து அரும்­பா­டு­பட்­டி­ருப்­பார்.

இந்­தி­யா­வின் பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் மற்­றும் அவர்­க­ளது ரத கஜ துரக பதா­தி­கள் அனைத்­தும் முன்­ன­ணி­யி­லும், உலக மகாப் பணக்­கா­ரர்­கள் அதானி, அம்­பானி போன்­றோர் பின்­ன­ணி­யி­லும் இருந்து நடத்தி முடித்த தேர்­தல். அதை­விட இந்­தக் கூட்­ட­ணி­யில் தேர்­தல் கமி­ஷ­னும் இணைந்து செயல்­பட்­ட­தை­யும் மறுத்­திட இய­லாது. பட்­டேல் சமூ­கத்­தைச் சேர்ந்த ஹர்த்­திக் பட்­டேல் தேர்­த­லுக்கு முன் பா.ஜ.கா.வில் சேர்க்­கப்­பட்­டார். இவர் கடந்த தேர்­த­லின்­போது காங்­கி­ர­சில் சேர்ந்து தேர்­தல்களத்தை சந்­தித்­த­வர். பட்­டேல் சமூ­கத்தை சேர்ந்­த­வர்.

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

அந்த மக்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீ­டுக்­காக குஜ­ராத் மாநி­லத்­தில் தொடர் போராட்­டங்­கள் நடத்­தி­ய­வர். அந்த இன­மக்­க­ளி­டம் செல்­வாக்­கு­மிக்­க­வர். இவர் மீது ஒரு கட்­டத்­தில் குஜ­ராத்­தின் பா.ஜ.க. அரசு தேசத்­து­ரோக வழக்கு பதிவு செய்து சிறை­யில் அடைத்­தது. ஒன்­றல்ல; இவர் மீது இரண்டு தேசத்­து­ரோக வழக்­­­கு­களை பா.ஜ.க. அரசு போட்­டுள்­ளது! ஏறத்­தாழ இந்த வழக்­கு­க­ளால் 9 மாதம் சிறை­யில் இருந்த ஹர்­திக் பட்­டேல் – 6 மாத காலம் குஜ­ராத் மாநி­லத்­துக்­குள் வரக்­கூ­டாது என்ற நிபந்­த­­­னை­யு­டன் குஜ­ராத் உயர் நீதி­மன்­றத்­தால் ஜாமின் வழங்­கப்­பட்டு வெளி­யில் வந்­த­வர் என்­ப­தெல்­லாம் வர­லாறு!

தேசத்­து­ரோக வழக்­­­கு­க­ளில் சிக்­கிய ஹர்­திக் பட்­டேல், திடீ­ரென காங்­கி­ர­சில் இருந்­த­போதே பி.ஜே.பி.யை புக­ழத் தொடங்­கி­னார்.2022 மே மாதம் அவர் மீது தொடுக்­கப்­பட்­டி­ருந்த கிரி­மி­னல் வழக்­­­கு­களை குஜ­ராத் பி.ஜே.பி. அரசு திரும்­பப் பெற்­றுக் கொண்­டது. தேசத் து­ரோகி என முத்­திரை குத்­தப்­பட்டு வழக்­­­கு­களை சந்­தித்த ஹர்­திக் படே­லுக்கு ‘‘கங்­கா ஸ்நானம்’’ செய்து அவரை தேசப்­பக்­த­ராக்கி விட்­ட­னர்! அவ­ரும் பி.ஜே.பி.யில் இணைந்து விட்­டார்!

தில்லு முல்லு தில்லு முல்லு

உள்­ள­மெல்­லாம் கல்லு முள்ளு

ஆயி­ரம் நாட­கம்;

ஆயி­ரம் வேஷங்­கள்...

வெட்­க­மில்லை, துக்­க­மில்­லை...

என்ற திரைப்­ப­டப் பாடல் வரி­க­ளுக்கு உயி­­­ரோட்­டம் தரும் வகை­யில் பல நாட­கங்­களை வெட்­க­மின்றி நடத்தி தட்­டிப் பறித்த வெற்­றி­தான் குஜ­ராத் வெற்றி!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

இத்­­­த­கைய இழி­தகை நாட­க­­ங்­கள் பழி பாவத்­துக்­கஞ்சா படு­பா­த­கச் செயல்­கள் நடத்தி பி.ஜே.பி. பெற்ற வெற்­றியை, ஏதோ இம­யத்­தையே பேர்த்­தெ­டுத்து தலை­யில் மோடி தாங்­கி­யுள்­ளது போல ‘Land Slide Victory’ ‘bulldozed Victory’ அதா­வது எதி­ரி­களை சரி­யச் செய்து தரை­மட்­ட­மா­கத் தகர்த்­திட்ட வெற்றி என்­றெல்­லாம் ஆங்­கில செய்தி தொலைக்­காட்­சி­கள் வரு­ணித்­தன!ஊடகங்­கள் எந்த அள­வில் பி.ஜே.பி.யின் கட்­டுப்­பாட்­டுக்­குள் முடங்­கிப் போயுள்­ளன என்­ப­தற்கு நடந்து முடிந்த இரு மாநில இடைத்­தேர்­தல்­கள் முடிவு குறித்­தும், டெல்லி மாந­க­ராட்சி தேர்­தல் முடிவு பற்றியும் அவை வெளி­யிட்ட செய்­தி­கள் மூலமே அறி­ய­லாம்!

டெல்லி மாந­க­ராட்சி தேர்­தல் முடி­வு­கள் முதல் நாள் வெளி வந்­தன! தலை­ந­கர் டெல்­லி­யின் ஆட்சி ‘ஆம் ஆத்­மி­’­யி­டம் இருந்­தா­லும் அங்­குள்ள காவல் துறை ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டுக்­குள் இயங்­கு­கி­றது; தலை­ந­கர் டெல்லி, இந்­தி­யா­வின் நாடா­ளு­மன்­றம், இந்­தி­யா­வின் குடி­ய­ர­சுத் தலை­வர் இந்­தி­யாவை ஆட்சி புரி­யும் பிர­த­மர், அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் அமித்ஷா போன்ற அமைச்­சர்­கள் வசிக்­கும் இடம். இந்த மாந­க­ராட்சி தேர்­தல் என்­பது டெல்லி சட்­ட­மன்­றத்­துக்கு நடை­பெற்ற தேர்­த­லைப் போன்­றது! டெல்­லி­யில் இந்த தேர்­த­லுக்கு முன், வட­டெல்லி முனி­சி­பல் கார்ப்­ப­ரே­ஷன், தென்­டெல்லி முனி­­­சி­பல் கார்ப்­ப­ரே­ஷன், கிழக்கு டெல்லி முனி­­­சி­பல் கார்ப்­ப­ரே­ஷன் என மூன்று மாந­க­ராட்­சி­கள் இருந்­தன!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

இந்த மூன்­றை­யும் பி.ஜே.பி. கைப்பற்றி ஆட்சி செலுத்­திக் கொண்­டி­­­ருந்­தது. இந்த மூன்று மாந­க­ராட்­சி­­­க­ளும், ஒன்­றிய அர­சின் ஒப்­பு­த­லோடு ஒன்­றி­ணைக்­கப்­பட்டு, டில்­லி­யின் ஒன்­றி­ணைந்த கார்ப்­ப­ரே­­­ஷ­னாக மாற்­றப்­பட்­ட­­து! அந்த ஒன்­றி­ணைந்த மாந­க­ராட்­சிக்கு நடை­பெற்ற தேர்­தல் என்­பது – ஏறத்­தாழ ஒரு மாநி­லத் தேர்­தலை ஒத்­தது! அந்த தேர்­த­லில், ஆம் ஆத்மி, அது­வரை மூன்று கார்ப்­ப­ரே­ஷன்­க­ளை­யும் ஆட்சி செய்து வந்த பி.ஜே.பி.யை வீழ்த்தி வெற்றி கண்­டது!

ஆம் ஆத்மி அங்கு பெற்ற வெற்றி குறைத்து மதிப்­பி­டக்­கூ­டிய ஒன்­றல்ல; ஒன்­றி­யத்தை ஆளும் கட்­சி­யான பி.ஜே.பி. சாம்­ராஜ்­யம் நடத்­திய மூன்று கார்ப்­ப­ரே­ஷன்­க­ளை­யும் தகர்த்து ஆம் ஆத்மி கண்ட வெற்றி! அந்த மாபெ­ரும் வெற்­றியை, பி.ஜே.பி.க்கு பயந்து அல்­லது பணிந்து அடக்கி வாசித்த ஊட­கங்­கள், குஜ­ராத்­தில் பி.ஜே.பி. தக்க வைத்­துக் கொண்ட வெற்­றியை ஊதிப் பெரிது படுத்தி வரு­கின்­றன!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

அதே­போல இமாச்­ச­லப் பிர­தே­சத்­தின் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பி.ஜே.பி.யை வீழ்த்தி காங்­கி­ரஸ் வெற்றி ஈட்­டி­யுள்­ளது; காங்­கி­ரஸ் அங்கு பெற்ற வெற்றி குறைத்து மதிப்­பிட முடி­யாத வெற்றி! ஆளும் கட்­சி­யாக இருந்த பி.ஜே.பி.யை தகர்த்து கண்ட வெற்றி அந்த வெற்­றியை இருட்­ட­டிட்பு செய்து, கைவ­சம் இருந்த ஆட்­சியை படா­த­பா­டு­பட்டு, தேர்­தல் கமி­ஷன் முதல் மற்ற அத்­தனை அரசு சாத­னங்­களை, தவ­றா­கப் பயன்­ப­டுத்தி அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­கள், அத்­து­ மீறி செய்து

உல­க­மகா பணக்­கா­ரர்­கள் அதானி, அம்­பானி போன்­றோர் அருட்­க­டாட்­சத்­தோடு சந்­தித்து தில்­லு­முல்­லு­கள் பல நடத்தி, தக்க வைத்­துக் கொண்ட ஒரு வெற்­றிக்கு விளம்­பர வெளிச்­சம் தரும் வகை­யில் ஊட­கங்­கள் ஒன்­றிய அர­சின் ஊது குழ­லா­கி­விட்­டன! என்.டி.டிவி போன்ற ஊட­கங்­கள் சில நேரங்­க­ளில் உண்மை நிலையை வெளிக் கொணர்ந்து வந்த நிலை­யில், அத­னை­யும் அதானி மூலம் கப­ளீ­க­ரம் செய்­து­விட்­ட­னர்.குஜ­ராத் வெற்­றிக்கு ‘TSUNAMO Decimates Congress in Gujarat’ எனத் தலைப்­பிட்ட என்.டி.டிவி, ராஜஸ்­தா­னில் காங்கி­ரஸ் பெற்ற வெற்­றிக்கு “Congress Wrests back Himachal” என்று குறிப்­பிட்­ட­தி­லி­ருந்தே ஊட­கங்­கள் எப்­படி செயல்­ப­டத் தொடங்­கி­விட்­டன, அல்­லது செயல்­பட வேண்­டு­மென்று பணிக்­கப்­பட்­ட­தற்கு பணிந்து நடுங்கி செயல்­ப­டு­கின்­றன என்­பதை தெளி­வாக்­கு­கின்­றன!

BJP-யின் பீடம் ஆடத் தொடங்கி விட்டது; டெல்லி,இமாச்சல் தேர்தல் முடிவு உணர்த்திடும் பாடம்- சிலந்தி கட்டுரை!

வட­இந்­திய ஊட­கங்­கள் மட்­டு­மல்ல; நமது தமிழ்­நாட்­டின் ஊட­கங்­கள் சில­வும், அப்­ப­டித்­தான் செய்­தி­கள் வெளி­யிட்டு ஒன்­றிய அர­சின் கடைக்­கண் பார்­வைக்­காக காலை கழுவி நின்­றன! தமி­ழ­கத்­தி­லி­ருந்து வரும் ஒரு செய்தி தொலைக்­காட்சி, குஜ­ராத் வெற்­றியை சுட்­டிக்­காட்டி, “குஜ­ராத் வெற்றி 2024 தேர்­த­லில் மோடி அலை­தானா என ‘ஸ்குரோல்’ விட்­டது; அதே நேரத்­தில் கடந்த முறை ஆட்­சி­யி­லி­ருந்த பா.ஜ.க.வை வீழ்த்தி இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் காங்­கி­ரஸ் பெற்ற வெற்­றியை, “மீண்­டும் ஹிமாச்­ச­லில் ஆட்­சியை பிடித்­தது காங்” என்று தலைப்­பிட்டு தங்­க­ளது ‘சகுனி’ வேலை­களை காட்­டி­யுள்­ளது!

இத்­த­னைக்­கும் அந்த ‘நம்­மூர்’ தொலைக்­காட்சி நிறு­வ­னம் ‘சங்கி’ களின் கட்­டுப்­பாட்­டில் இயங்­கு­வது அல்ல; ஆனால் ‘சங்கி குஞ்­சு­கள்’ அங்கே புகுந்து கொண்டு நடத்­தி­டும் ‘சாணக்ய’ வேலை­கள் அவை!நாட்டு மக்­கள் விழிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர்! ஏமாற்­றுப் பேர்­வ­ழி­க­ளின் எத்து வேலை­களை உண­ரத் தொடங்கி விட்­ட­னர். அதன் விளைவே பார­திய ஜனதா, சந்­திக்­கத் தொடங்­கி­யி­ருக்­கும் தோல்­வி­கள்! இமாச்­ச­ல­பி­ர­தே­சம் மட்­டு­மின்றி நாட்­டின் பல பகு­தி­க­ளில் நடை­பெற்ற இடைத்­தேர்­தல்­க­ளி­லும் பெற்ற தோல்­வி­கள்!

புண் புறை­யோ­டிக் கொண்­டி­ருக்­கி­றது; ஊட­கங்­களை மிரட்டி அந்­தப் புண்­ணுக்கு புணுகு தட­வி­டும் வேளை­க­ளில் ஈடு­ப­டா­தீர்­கள்! மக்­கள் விழிக்­கத் தொடங்கி விட்­ட­னர். பச்­சைப் பாம்பை பச்­சைக் கொடி­யா­கக் காட்டி அவர்­களை ஏமாற்­றும் வேலைக்கு முற்­றுப் புள்ளி வையுங்­கள். ஆட்சி பீடத்­தில் ஏறி ஆடிய ஆட்­டங்­கள் இனி எடு­ப­டாது; ஏனென்­றால் பீடமே ஆடத் தொடங்­கி­விட்­டது. நடந்து முடிந்த தேர்­தல்­க­ளின் முடி­வு­கள் தெளி­வாக்­கும் உண்மை இது­தான்

banner

Related Stories

Related Stories