அரசியல்

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

NDTV-யின் இயக்குநர் பொறுப்பில் இருந்து பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் விலகியுள்ளனர்.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் நம்பகமான செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வந்த ‘என்டிடிவி’ (NDTV)-யை அதானி குழுமம் கைப்பற்றியுள்ள நிலையில், என்.டி.டி.வி-யின் நிறுவனர்களான பிரணாய் ராய் - அவரது மனைவி ராதிகா ராயும் தங்களின் இயக்குநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

குறுக்கு வழியில் தங்களின் நிறுவனத்தைக் கைப்பற்றிய அதானியின் பணம் - அதிகாரத்தோடு மோதி வெற்றிபெற முடியாவிட்டாலும், ஒருபோதும் சமரசத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள மாட்டோம் என்று இந்த ராஜினாமா முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்களது இந்த முடிவு ஊடக, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.டி.வி (New Delhi Television Ltd - NDTV) நிறுவனமானது, நாட்டின் புகழ்பெற்ற செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகும். 1984-ஆம் ஆண்டில் சர்வதேச செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் ஆகியவற்றிற்கான தயாரிப்பு நிறுவனமாக என்.டி.டி.வி தொடங்கப்பட்டது. பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகாராயும் இந்நிறுவனத்தின் நிறுவனர்களாக செயல்பட்டுவந்தனர்.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

என்.டி.டி.வி நிறுவனத்தின் 61.45 சதவிகித பங்குகள், அதன் நிறுவனர்களான ராதிகா ராய், பிரணாய் ராய் வசமே இருந்தன. இதில், 29.18 சதவிகித பங்குகள், தனியாக ராதிகா ராய், பிரணாய் ராய்க்குச் சொந்தமான ‘ஆர்.ஆர்.பி.ஆர்’ ‘ஹோல்டிக் பிரைவேட் லிமிடெட்’ (RRPR Holding Private Limited)வசம் இருந்தன. என்.டி.டி.வி-க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவுவதற்காக இந்த ‘ஆர்.ஆர்.பி.ஆர்’ நிறுவனத்தை பிரணாய் ராயும், ராதிகா ராயும் ஏற்படுத்தியிருந்தனர். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் இருந்து வந்தனர்.

இதனிடையே, ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம், 2009-10ஆம் ஆண்டில் தன்பெயரிலுள்ள 29.18 சதவிகித பங்குகளை அடமானமாக வைத்து, ‘விஸ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமி டெட் - வி.பி.சி.எல்’ (VPCL) என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 403 கோடியை வட்டியில்லாக் கடனாக வாங்கியது. வி.பி.சி.எல் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 403 கோடி கடனை பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் திருப்பித் தரவில்லை எனில், ‘வி.பி.சி.எல்’ நிறுவனம் ‘ஆர்.ஆர்.பி.ஆர்’ நிறு வனத்திடம் இருக்கும் 29.18 சதவிகித என்.டி.டி.வி பங்குகளை தன் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என்ற பற்றாணை (warrant) மட்டும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.பி.ஆர்’ நிறுவனத்திற்கு கடன்கொடுத்திருந்த ‘வி.பி.சி.எல்’ நிறுவனத்தை அதானியின் ஏ.எம்.ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் (AMG Media Net works Ltd) நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 113 கோடியே 74 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. இதன்மூலம் ‘வி.பி.சி.எல்’ நிறுவனம் வசமிருந்த என்.டி.டி.வி-யின் 29.18 சதவிகித பங்குகளும் தானாகவே அதானி கைகளுக்குச் சென்றன. இதனை பகிரங்கமாக அறிவித்த அதானி குழுமம், 29.18 சதவிகித பங்குகள் போக என்.டி.டி.வி-யின் 38.55 சதவிகித பொதுப்பங்குகளிலும் 26 சதவிகித பங்குகளை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்தது.

இது என்.டி.டி.வி-யின் நிறுவனர்கள் பிரணாய் ராய் - ராதிகா ராய் ஆகியோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு நிறுவனத்தின் பங்கு களை பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கும் செயல் ‘முறையற்ற கையகப்படுத்துதல்’ (Hostile Takeover) என்று அவர்கள் கூறினர். “தொலைக்காட்சி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. வி.பி.சி.எல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

நாங்கள் எங்களின் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். நாங்கள் பத்திரிகைத் துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61 சதவிகித பங்குகள் எங்கள் வசமே இருக்கின்றன” என்று தெரிவித்தது. எனினும் என்.டி.டி.வி ஊடகத்தின் 26 சதவிகித பங்குகளை திறந்த சலுகை (Initial Public Offering - IPO) மூலம் வாங்குவதற்கு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான ‘செபி’ (Securities and Exchange Board of India - SEBI)-யின் ஒப்புதலைப் பெற்ற அதானி, இதன்மூலம் 55.18 சதவிகித பங்குகளுடன் என்.டி.டி.வி ஊடகத்தையே முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமானார்.

விரைவில் என்.டி.டி.வி நிறுவனம் அதானி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, என்.டி.டி.வி நிறுவனர்களான பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும், என்.டி.டி.வி புரமோட்டர் நிறுவனமான ஆர்.ஆர்.பி.ஆர் (RRPR) நிர்வாகக் குழுவின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

“என்.டி.டி.வி நிறுவனத்தை பொறுப்புக்காக வாங்கியுள்ளதாகவும், தொழிலுக்காக வாங்க வில்லை” எனவும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முன்பு தெரிவித்திருந்தார். மேலும், என்.டி.டி.வி தலைவராக பிரணாய் ராய் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அதானி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை பிரணாய் ராய் ஏற்க மறுத்து விட்டார் என்பதையே அவரின் ராஜினாமா செய்தி காட்டுகிறது.

இந்தியாவில் இயங்கி வரும் ஊடகங்கள் பெரும்பாலும் பெருமுதலாளிகளால் இயக்கப் பட்டு வரும் நிலையில், என்.டி.டி.வி தனித்து இயங்கி வந்தது. தேர்தல் கருத்துக் கணிப்புகளின் முன்னோடியும், நாட்டின் மூத்த பத்திரிகையாளருமான பிரணாய் ராய் தலைமையில், சார்பற்ற செய்திகளையும் என்.டி.டி.வி வழங்கி வந்தது.

NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி?

இந்தியாவின் முதல் சுதந்திரமான செய்தி நெட்வொர்க்காக அது பெயரெடுத்து இருந்தது. ஆனால், குறுக்கு வழியில்- ஒரு மோசடி போல- அந்த நிறுவனத்தை அதானி குழுமம் கைப்பற்றிய நிலையில், (என்.டி.டி.வியின் 32.26 சதவிகித பங்குகள் இப்போதும் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் வசம் உள்ளன என்றாலும்) பிரணாய் ராயும், ராதிகா ராயும் ராஜினாமா செய்துள்ளனர். இது ஊடக உலகத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கனவே ‘நெட்வொர்க்-18’ அம்பானி வசம் உள்ள நிலையில், என்.டி.டி.வி முழுமையாக அதானியின் வசம் சென்றுள்ளது. இந்தியாவின் இரண்டு முக்கிய ஊடக நிறுவனங்கள் தற்போது பா.ஜ.க ஆதரவு முதலாளிகளின் வசமாகி உள்ளது.

இந்த ‘ஊடகங்கள் கைப்பற்றுதல்’ எதிர்வரவுள்ள 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க-வுக்கும் மிகுந்த அவசியமாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, குவிண்டிலியன் பிசினஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Quintillion Business Media Pvt Ltd -QBM) என்ற டிஜிட்டல் வணிக செய்தித் தளத்தையும் அதானி விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- நன்றி : தீக்கதிர்

Related Stories

Related Stories