இந்தியா

NDTV-யின் 29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக NDTVயின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NDTV-யின்  29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக NDTV இருந்து வருகிறது. இந்த செய்தி நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான அதானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

அதானி குழுமம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி " NDTVயின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக வாங்கும் என்றும் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

NDTV-யின்  29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?

NDTVயின் 29.18 சதவீத பங்குகள் விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோரால் உருவாக்கப்பட்ட RRPR நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருந்தது. அதை தற்போது அதானி குழுமம் வாங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2021 இல், அதானி குழுமம் NDTV-யை கையகப்படுத்தியதாக அறிக்கைகள் வெளிவந்த பிறகு அதை RRPR நிறுவனத்தின் உரிமையாளர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் மறுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போதுஅதானி குழுமம் RRPR நிறுவன பங்குகளை வாங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NDTV-யின்  29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?

அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் அதானி இந்தியாவின் பெரிய செய்தி நிறுவனத்தில் ஒன்றான NDTVயின் 25% க்கும் அதிகமான வாக்குரிமையைப் பெறுகிறார். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் அதானி வசம் செல்லவுள்ளது.

banner

Related Stories

Related Stories