அரசியல்

ஆங்கிலம் தெரியும், இந்தியில் பேச தெரியாதா? -இந்தி திணிப்பில் ஈடுபட்ட டெல்லி அதிகாரி.. பரபரப்பில் புதுவை !

தேசிய மொழியான இந்தி தெரியாமல் அரசுப் பதவிகளுக்கு எப்படி வந்தீர்கள்? என புதுச்சேரி அதிகாரிகளை பார்த்து தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலம் தெரியும், இந்தியில் பேச தெரியாதா? -இந்தி திணிப்பில் ஈடுபட்ட டெல்லி அதிகாரி.. பரபரப்பில் புதுவை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கு மறைமுக இந்தி திணிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இந்த முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தலைமைச் செயலத்தில் தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. அந்தக் கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் சாய் சரவணக்குமார் கலந்துகொண்டார்.

ஆங்கிலம் தெரியும், இந்தியில் பேச தெரியாதா? -இந்தி திணிப்பில் ஈடுபட்ட டெல்லி அதிகாரி.. பரபரப்பில் புதுவை !

அப்போது நிகழ்ச்சியில் சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி இந்தியில் பேசத்தொடங்கியுள்ளார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் கடும் ஆத்திரம் முடிந்த சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் தேசிய மொழியான இந்தி தெரியாமல் அரசுப் பதவிகளுக்கு எப்படி வந்தீர்கள்? என காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து இந்தியில் பேச மற்றொருவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த கூட்டம் முடிந்ததும் இது தொடர்பான தகவல் வெளிவந்த நிலையில்,சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் தெரியும், இந்தியில் பேச தெரியாதா? -இந்தி திணிப்பில் ஈடுபட்ட டெல்லி அதிகாரி.. பரபரப்பில் புதுவை !

இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரியில் நடைபெற்ற ஒன்றிய அரசின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத்ஷாகிசாதி, அதிகாரிகளிடம் இந்தியிலேயே பேசினார். அப்போது புதுச்சேரி அதிகாரிகள் ஒன்றுமே புரியாமல் குழம்பி இருந்தனர். அதனால் எங்கள் யாருக்கும் இந்தி தெரியாது, எனவே ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தனர். அதை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாறாக, 'தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்?' என்று கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

இதனை புதுச்சேரி தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. இவரது இந்த அநாகரிக, தேவையற்ற செயலால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories