அரசியல்

"குஜராத் தேர்தல் வருவதால்தான் பாஜக CAA, NRC பற்றி பேசுகிறது" -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தாக்கு !

குஜராத் தேர்தல் வரும்நிலையில் மீண்டும் பாஜக CAA மற்றும் NRC குறித்து பேசியுள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ விமர்சித்துள்ளார்.

"குஜராத் தேர்தல் வருவதால்தான் பாஜக CAA, NRC பற்றி பேசுகிறது" -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு குடியுரிமை சட்டங்களில்(CAA ) மாற்றத்தை கொண்டுவருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்(NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தான் கொண்டுவந்த சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு சற்று நிறுத்தி வைத்தது.

"குஜராத் தேர்தல் வருவதால்தான் பாஜக CAA, NRC பற்றி பேசுகிறது" -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தாக்கு !

இந்த நிலையில், தற்போது மீண்டும் அதைக் குறித்து பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில், மீண்டும் அதுகுறித்த சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் பாஜக CAA மற்றும் NRC-யை அமல்படுத்துவோம் என்று பேசுவார்கள். தற்போது குஜராத் தேர்தல் வரும்நிலையில் மீண்டும் பாஜக CAA மற்றும் NRC குறித்து பேசியுள்ளது.

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பிரிவினையை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மாநிலத்தை பிரிக்க நான் எந்த வகையிலும் சம்மதிக்க மாட்டேன் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பாஜக யார்? " எனக் காட்டமாக பேசியுள்ளார்.

"குஜராத் தேர்தல் வருவதால்தான் பாஜக CAA, NRC பற்றி பேசுகிறது" -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தாக்கு !

தொடர்ந்து பேசிய அவர், "2024 லோக் சபா தேர்தலுக்கு பிறகு பாஜகவால் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. தற்போது பாஜகவின் அரசியல் இருப்பு நாடு முழுவதும் குறைந்துவிட்டது. அதன் காரணமாகவே தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கியும் பேசியும் கைது செய்தும் வருகிறது. முன்பு அரசியல் சூழலும், தற்போது நிலவி வரும் அரசியல் சூழலும் மாறிவிட்டது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories