அரசியல்

“Whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்..”: பெண் மீது பாஜக MLA பரபரப்பு புகார் - கர்நாடகாவில் தொடரும் HONEY TRAP

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ-வான G. H.திப்பாரெட்டி, மர்ம பெண் ஒருவர் வாட்சப்பில் நிர்வாண வீடியோ கால் செய்ததாக காவல்துறையில் புகாரளித்துள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்..”: பெண் மீது பாஜக MLA பரபரப்பு புகார் - கர்நாடகாவில் தொடரும் HONEY TRAP
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ-வான G. H.திப்பாரெட்டி, மர்ம பெண் ஒருவர் வாட்சப்பில் நிர்வாண வீடியோ கால் செய்ததாக காவல்துறையில் புகாரளித்துள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் G. H.திப்பாரெட்டி. இவர் தற்போது அந்த தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.

“Whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்..”: பெண் மீது பாஜக MLA பரபரப்பு புகார் - கர்நாடகாவில் தொடரும் HONEY TRAP

இந்த நிலையில் தனக்கு மர்ம பெண் ஒருவர் வாட்சப்பில் நிர்வாண வீடியோ கால்செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரளித்த புகாரில், “கடந்த அக்டோபர் 31-ம் தேதி எனக்கு வாட்ஸப்பில் தெரியாத எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தது. யார் என்று தெரியாமல் நான் அதை எடுத்தேன். அப்போது அந்த பெண் ஆபாசமாக நடந்து கொண்டார். பின்னர் நான் உடனே அந்த அழைப்பை துணித்துவிட்டேன்.

பின்னர் அவர் எனக்கு வாட்ஸப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். அந்த பெண் யாரென்று தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“Whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்..”: பெண் மீது பாஜக MLA பரபரப்பு புகார் - கர்நாடகாவில் தொடரும் HONEY TRAP

இதையடுத்து இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “வாட்ஸப்பில் தெரியாத எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தபோது, அதனை நான் எடுத்தேன். யார் என்ன என்று கேட்டேன். ஆனால் என் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று நான் அழைப்பை துண்டித்தேன். மீண்டும் மற்றொரு எண்ணிலிருந்து கால் வந்தது. அதை எடுத்து நான் கேள்வி கேட்டபோது, அதற்கும் பதில் வரவில்லை.

மாறாக அந்த பெண் தனது உடைகளை கழற்ற தொடங்கிவிட்டார். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்து என் மனைவியிடம் கொடுத்துவிட்டேன். பின்னர் மீண்டும் கால் வந்தது. அந்த எண்ணை பிளாக் செய்து எனது செல்போனை ஓரமாக வைத்துவிட்டேன். இது குறித்து காவல்துறை ஆய்வாளரிடம் கூறியபோது, அவரது ஆலோசனையின்படி தற்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

ஒடிசா honey trap -       அர்ச்சனா
ஒடிசா honey trap - அர்ச்சனா

முன்னதாக கடந்த மாதம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பணம்படைத்தவர்களை குறி வைத்து தனது அந்தரங்க வலையில் சிக்க வைத்துள்ளார். மேலும் அதனை தனது காதலன் உதவியோடு வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அர்ச்சனா சிக்கியுள்ளார். அர்ச்சனை வலையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.டி கட்சித் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 75 வயதுடைய பா.ஜ.க MLA-வுக்கு மர்ம பெண் ஒருவர் நிர்வாண வாட்சப் வீடியோ கால் செய்துள்ளதாக புகார் அளித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories