அரசியல்

மூச்சுக்கொடுத்து பேசியும் கண்டுகொள்ளாத தொண்டர்கள்.. வெடுக்கென மைக்கை தூக்கி எறிந்த பா.ஜ.க அமைச்சர் !

தனது பேச்சை கேட்காத தொண்டர்கள் மீது கோபப்பட்டு மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பாஜக அமைச்சரின் செயல் உத்தரபிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுக்கொடுத்து பேசியும் கண்டுகொள்ளாத தொண்டர்கள்.. வெடுக்கென மைக்கை தூக்கி எறிந்த பா.ஜ.க அமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சஞ்சய் நிஷாத். நேற்று மாவ் என்ற நகரில் பாஜக சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் சஞ்சய் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது இவரது சிறப்பான உரையை கேட்பதில் அங்கிருந்த தொண்டர்கள் முனைப்பு காட்டவில்லை. மாறாக தங்கள் சொந்த கதை, சோகக்கதையை பேசிக்கொண்டிருந்தனர்.

மூச்சுக்கொடுத்து பேசியும் கண்டுகொள்ளாத தொண்டர்கள்.. வெடுக்கென மைக்கை தூக்கி எறிந்த பா.ஜ.க அமைச்சர் !

மேலும் வழக்கம்போல் நொறுக்குதீனியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இதனை கண்ட அமைச்சருக்கு கோபம் தலைகேறியுள்ளது. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் ஆத்திரப்பட்ட அமைச்சர் 'என்னை விட நீங்கள் என்ன பெரிய அரசியல்வாதியா? அப்படியென்றால் நீங்கள் பேசுங்கள். இல்லையென்றால் என்னுடைய பேச்சை கவனியுங்கள்" என்று கூறியதுடன், கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்துள்ளார். இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மூச்சுக்கொடுத்து பேசியும் கண்டுகொள்ளாத தொண்டர்கள்.. வெடுக்கென மைக்கை தூக்கி எறிந்த பா.ஜ.க அமைச்சர் !

மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் தொண்டர்களை கடுமையாக வசைபாடினார். அதோடு 'மேடையில் நான் பேசுகிறேன். கேட்க வேண்டும் என விரும்பினால், கேளுங்கள். அதனை விடுத்து ஏன் பேசி கொண்டு இருக்கிறீர்கள்' என்றும் கடுமையாக பேசினார். அதோடு 'நீங்கள் எல்லாம் சமூகத்தில் உயர்நிலையை அடைந்த அரசியல்வாதிகளா? யாரோ சிலரின் அடியை பின்பற்றி நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அழிக்கப்பட்டு விடுவீர்கள்' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வு அந்த பகுதி மக்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு அமைச்சரின் பேச்சை கேட்காத தொண்டர்களால் கலகலப்பும், அதற்காக கோபப்பட்ட அமைச்சர் மைக்கை தூக்கி எரித்துள்ள சம்பவத்தால் அந்த பகுதியில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories