அரசியல்

இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர்: சிலிர்த்தெழுந்து வாரீர்!

இதோ; இன்று மீண்டும் இந்தித் திணிப்பு தலைதூக்கத் தொடங்கிவிட்டது; முன்னைவிட மூர்க்கமாக. வெறித்தனத்தோடு மற்ற மொழிகளை சிதைத்தொழித்து அங்கே தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முழுமூச்சோடு பாயப் புறப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர்: சிலிர்த்தெழுந்து வாரீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிங்கமென்ற இளங்காளைகளே; சிலிர்த்தெழுந்து வாரீர்! வாரீர்!!

அக்டோபர் 15!

அறப்போர் களத்தில் அணிவகுக்க இருக்கும் இளைஞர் அணிச் சிப்பாய்களே! மாணவர் அணிச் சிங்கங்களே!

நீங்கள் அணிவகுத்து எதிர்ப்பைக் காட்டிட இருக்கும் ஆர்ப்பாட்டம்; இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர் மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர் என்பதை மறவாதீர்கள்! இந்தித் திணிப்பு என்பது இன்று ஏற்பட்டதல்ல; 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பதுங்கிப் பாயும் போக்கைக் கொண்டது. திராவிடர் இயக்கம் இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த இழந்த இன்னுயிர்கள், சிந்திய இரத்தம், அனுபவித்த சிறைக் கொடுமைகள் சித்ரவதைகள் ஏராளம்; ஏராளம்!

வருங்கால சந்ததிகளின் வாழ்வுப் பட்டுபோகக்கூடாதே; நமது மக்கள் இரண்டாந்தரக் குடிமகன்களாக மாறி இன்னல் ஏற்கக் கூடாதே;

இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர்: சிலிர்த்தெழுந்து வாரீர்!

"தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த தமிழ், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர் என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, உண்மைத் தமிழன் ஓவ்வொருவனும் உணர்ச்சி மேலீட்டால் மெய் சிலிர்க்கின்றானே! - அந்தத் தமிழுக்கு ஆதிக்க இந்தியால் ஆபத்து வந்துவிடக் கூடாதே; என்றெல்லாம் எண்ணி தங்கள் தேக்குமரத் தேகங்களை தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு “வாழ்க தமிழ்" - என வீழ்ந்த தியாகச் செம்மல்களின் தியாகத்தை எண்ணிப்பாருங்கள்.

மொழி காக்கும் போரில், ஈடுபட்டு அதனால் தங்களை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எனக்கருதி குடும்பம் மறந்து சிறைக் கொட்டடிகளில் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அடைப்பட்டுக் கிடந்தார்களே அவர்களது அர்ப்பணிப்பை நினைத்துப் பாருங்கள்! இத்தரை மீதினில் எத்தனை இரத்தம் சிந்தி நம் முன்னோர் இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர்: சிலிர்த்தெழுந்து வாரீர்!

அத்தனையும் எதனால். இன்றைய சந்ததியின் நல்வாழ்வுக்காக அவர்கள் அன்று தங்களை வதைத்துக் கொண்டார்கள்; வருத்திக் கொண்டார்கள்; தங்களது சுக, துக்கங்களை துறந்து போராடினார்கள்.

இதோ; இன்று மீண்டும் இந்தித் திணிப்பு தலைதூக்கத் தொடங்கிவிட்டது; முன்னைவிட மூர்க்கமாக. வெறித்தனத்தோடு மற்ற மொழிகளை சிதைத்தொழித்து அங்கே தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முழுமூச்சோடு பாயப் புறப்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்தாவிட்டால் நாளை நாமும், நமது சந்ததியினரும், அண்ணா அன்று கூறியது போல இரண்டாந்தர குடிமகனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிடந்திட வேண்டும்.

அரசியல் ஆதிக்கக்காரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்ய வெறி கொண்டவர்கள் தங்களுடைய மொழியைத் திணித்து, 'இதிலேதான் பாடங்கள் நடக்கும்; இதிலேதான் தேர்வுகள் நடக்கும், இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும்; இந்த மொழியில்தான் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடக்கும்.' என்று அறிவித்திட தயாராகிவிட்டார்கள்! இதை எல்லாம் ஏற்க ஒரு போதும் ஒப்பிடோம். மீண்டும் ஒரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்காதீர்கள்"- என்று தி.மு.கழகத் தலைவர் எச்சரித்துள்ளார்.

இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்மட்டுமல்ல; தாய்த் தமிழை காத்திடும் அறப்போர்: சிலிர்த்தெழுந்து வாரீர்!

தங்கள் தாய்மொழிக்கு வரும் பேராபத்தை உணர்ந்து மேற்கு வங்கம் போர்ப்பரணி பாடுகிறது. கேரளா கிளர்ந்து எழுந்து எதிர்ப்பை தெரிவித்துவிட்டது. கர்நாடக மாநிலத்திலிருந்து கடும் கண்டனக் குரல் கேட்கிறது. தெலுங்கானா வீறுகொண்டு எழுந்துவிட்டது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் முன்னணி மாநிலம் தமிழ்நாடு! இங்கு இந்தித் திணிப்புக்கு உங்கள் எதிர்ப்பை காட்டிட பாங்குறு இளைஞர்களே; பொங்கு கடலாய், சூறாவளியின் வேகம்பட்டு சுழன்று எழும் அலையாய் மாவட்டத் தலை நகரில் அணிவகுப்பீர்!

"சிங்கமென்ற இளங்காளைகளே - மிகத் தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே" "எப்பக்கம் வந்து புகுந்துவிடும் - அது இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்? அற்பமென்போம் அந்த இந்திதனை - அதன் ஆதிக்கந்தன்னைப் புதைத்திடுவோம்! ( புரட்சிக் கவிஞர்).

banner

Related Stories

Related Stories