அரசியல்

நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி போலிஸ் டீ கொடுத்து அதை அனுமதிக்கும் -இந்துத்துவ அமைப்பு சர்ச்சை கருத்து!

நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி காவல் ஆணையர் கூட தேனீர் கொடுத்து நாம் நினைப்பதை செய்ய அனுமதிப்பார் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி போலிஸ் டீ கொடுத்து அதை அனுமதிக்கும் -இந்துத்துவ அமைப்பு சர்ச்சை கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்கள் பேசும் வன்முறை பேச்சுகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது போன்ற வன்முறை பேச்சுகளுக்கு பாஜக தலைவர்களும் மௌனமாக ஆதரித்து வருவதால் தொடர்ந்து இதுபோன்ற வன்முறை பேச்சுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து மதவெறி கருத்துக்களை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி போலிஸ் டீ கொடுத்து அதை அனுமதிக்கும் -இந்துத்துவ அமைப்பு சர்ச்சை கருத்து!

இந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இதில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேச்சாளர் ஜகத் குரு யோகேஷ்வர் ஆச்சாரியா என்பவர், ம்மை தாக்கியவர்களின் தலைகளையும் கைகளையும் துண்டித்துவிடுங்கள், இதற்காக அதிகபட்சம் உங்களை சிறையில் அடைப்பார்கள் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளரான மஹாந்த் நவால் கிஷோர் தாஸ், துப்பாக்கிகளை வாங்குங்கள். அதற்கான உரிமத்தை பெறுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைத்தால் டெல்லி காவல் ஆணையர் கூட தேனீர் கொடுத்து நாம் நினைப்பதை செய்ய அனுமதிப்பார் என்று வன்முறைக்கு போலிஸார் கூட ஆதரவாக இருப்பார் என்ற விதத்தில் கூறியுள்ளார்.

நாம் துப்பாக்கி எடுத்தால் டெல்லி போலிஸ் டீ கொடுத்து அதை அனுமதிக்கும் -இந்துத்துவ அமைப்பு சர்ச்சை கருத்து!

இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், பலரும் இந்த மதவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு போலிஸார் இவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த பேச்சு அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories