அரசியல்

முன்னேற்றத்தின் அடையாளமாக திகழும் தமிழ்நாடு ! நாப்கின் பயன்பாட்டில் இந்தியாவிலேயே சாதனை !

மாதவிடாய் காலங்களில் துணியை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

முன்னேற்றத்தின் அடையாளமாக திகழும் தமிழ்நாடு ! நாப்கின் பயன்பாட்டில் இந்தியாவிலேயே சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். அந்த தருணத்தில் ஏற்படும் வலி பெண்களுக்கு அசவுகரியத்தையே தரும். மேலும், பண்பாட்டு ரீதியாக அந்த தருணத்தில் பெண்கள் தனியே வைக்கப்படுவதால் மனரீதியான துயரத்தையே பெண்கள் சந்திக்கின்றனர்.

மாதவிடாய் தருணங்களில் நாப்கினுக்கு பதில் துணியையே இன்னும் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். துணிகளை பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உதவியால் நாப்கின் பயன்பாடு சமீப காலமாக பெண்களிடையே அதிகரித்து வருகிறது. நாப்கின் ஆரம்ப கட்டத்தில் அதை வைத்திருப்பதே ஆபாசமாக பார்க்கப்பட்டு வந்ததும் தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் நாப்கின் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. Stats of India வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாதவிடாய் காலங்களில் துணியை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சுகாதாரமான நாப்கினையே பயன்படுத்துவது இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.அதேநேரம் வடஇந்தியாவில் அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் இன்றும் அதிகமாக மாதவிடாய் காலங்களில் துணிகளையே பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories