அரசியல்

கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது RSS அமைப்பு.. -சுப.வீரபாண்டியன் பேச்சு !

கொரோனாவை விட ஆர்.எஸ்.எஸ் மிகவும் ஆபத்தானது என திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது RSS அமைப்பு.. -சுப.வீரபாண்டியன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தி.மு.க முப்பெரும் விழா - திசைகளின் திருவிழா சென்னை அகரம் பெரவள்ளூர் சதுக்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்நிகழ்ச்சியில் கிரிராஜன் எம்பி, சென்னை மாநகராட்சி மேற்கு பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர் ICF முரளி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், "திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல ஆர்.எஸ்.எஸ்சே, அதிமுக கொடியில் அண்ணா இடம்பிடித்தது துரதிஷ்டவசமானது. ஏதேதோ செய்து ஆட்சியை கலைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள் இன்றைக்கும் என்றைக்கும் உங்களால் கலைக்க முடியாது, இனி தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி மட்டும்தான். அண்ணா இல்லை என்றால் தமிழகத்திற்கு முன்னேற்றம் இல்லை.

கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது RSS அமைப்பு.. -சுப.வீரபாண்டியன் பேச்சு !

அதிமுகவுக்கும் நமக்குமானது வெறும் அரசியல் போராட்டம். பாஜகவுக்கும் நமக்கும் ஆனது சித்தாந்த கருத்துகள் கொண்ட தத்துவ பரம்பரை போராட்டம். கொரோனாவை விட ஆர்.எஸ்.எஸ் மிகவும் ஆபத்தானது. கொரோனா குறைந்துவிட்டது. ஆனால் தமிழகத்தின் ஆர் எஸ் எஸ் நுழைய பார்க்கிறதை ஒருபோதும் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

அண்ணாமலை கூறுகிறார் காவல்துறை அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று அடித்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று தெரியும். பிற மாநிலங்களில் மத கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஒருபோதும் பகை நடக்காது. எங்களுக்கு வரலாறு இருக்கிறது அதனால் பேசுகிறோம். வரலாறு இல்லாதவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories