அரசியல்

“தொடரும் மநு தரும ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள்” : யார் மநு? - அம்பேத்கர் சொல்வது என்ன?

அம்பேத்கர் சொல்வது படி அவனும் போலிதான். மநு என்கிற பெயரில் சுமதி பார்கவ என்கிறவன் எழுதியிருக்கிறான்.

“தொடரும் மநு தரும ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள்” : யார் மநு? - அம்பேத்கர் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கடந்த சில நாட்களாக மநு தரும ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

யார் அவன் மநு?

அம்பேத்கர் சொல்வது படி அவனும் போலிதான். மநு என்கிற பெயரில் சுமதி பார்கவ என்கிறவன் எழுதியிருக்கிறான். ஆரிய கூட்டம் சுமந்து வந்த வருண பிரிவை இங்கிருக்கும் மக்களுக்கு ஏற்ப விரிவுப்படுத்தி வருண அடிப்படையிலான நிர்வாக முறை ஒன்று அரசுக்கென உருவாக்கப்பட்டது.

உழைக்கும் மக்களான இந்தியாவின் பூர்வக்குடிகள் அனைவரையும் சூத்திரர் என்றாக்கி வருணப் படிநிலையிலேயே கடைசி ஆக்கினான். வருண முறையின் ஒரே நோக்கம் பிராமணன் முதலாமவனாக இருப்பதுதான். அதற்காக பிற வருணங்களையும் ஒரு தனி எதிர் வர்க்கமாகவே மாறும் வாய்ப்பும் போர்க்குணமும் கொண்ட பெண்களை அடிமையாக்கினான். ஆகவே அடிப்படையாக இங்கு பிராமண கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவவும் தக்க வைக்கவும் மட்டுமே ஆண்டாண்டு காலமாக வருண முறை பல வழிகளில் பாதுகாக்கப்படுகிறது. மறைமுகமாக செயல்படுத்தப்படுகிறது.

“தொடரும் மநு தரும ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள்” : யார் மநு? - அம்பேத்கர் சொல்வது என்ன?

நிச்சயமாக நேரடியாக மநுஸ்மிருதியை சட்டமாக்க மாட்டார்கள். அதற்கான எல்லா விஷயங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவரல்லாத மக்களுக்கான நிர்வாக முறையை ஆங்கிலேயர்கள் தேடியபோது மநு ஸ்மிருதி கிடைக்கிறது. அதுவே மக்களுக்கான நியமமாக சுட்டப்படுகிறது. பிரிட்டிஷ்ஷாரும் அதை ஏற்றனர். இங்கு ஒரு கேள்வி!

பிரிட்டிஷ்ஷுக்கு மநு ஸ்மிருதியை பற்றி எப்படி தெரிய வந்திருக்கும்? பிரிட்டிஷ் ஆலோசனை கேட்கும் அதிகார மட்டங்களில் எந்த வருணத்தார் பதவியில் இருந்திருப்பார்? நிச்சயம் நீங்களும் நானுமல்ல. இதற்கான விடை சரியாக சொல்லிவிட்டால் இந்தியச் சமூகத்தை புரிந்திருக்கிறீர்கள் என அர்த்தம்.

பிராமண சமூகத்தை மட்டும் குறை கூறலாமா? நிச்சயமாக இல்லை. ஆனால் சமூக மேலாதிக்கத்தில் இருக்கும் வருணம் எது? சாதியை கேட்கவில்லை, வருணத்தை கேட்கிறேன்.

உங்களையும் என்னையும் கேட்டால் சாதியை சொல்வோம். ஓர் ஐயரை சென்று சாதி என்னவென கேட்டு பாருங்கள். 'Brahmin' என சொல்வார். இந்தியாவில் இருக்கும் மக்களில் காஷ்மீர் தொடங்கி குமரி வரை வருணத்தால் தன் சாதியை அடையாளப்படுத்துவது பிராமணர்கள் மட்டும்தான். பொதுவுடமை மொழியில் சொல்வதெனில் ஒரு class-ஆக தன்னை அடையாளப்படுத்தும் ஒரே சமூகம் அதுதான். உற்பத்திக் கருவிகளை கொண்டிருப்போருக்கு கட்டளை இடும் இடத்தில் இருக்கும் ஒரே வர்க்கம் அதுதான்.

“தொடரும் மநு தரும ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள்” : யார் மநு? - அம்பேத்கர் சொல்வது என்ன?

ஆகவேதான் அந்த வருணம் உயரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை ஒட்டி, சித்பவன பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க-விடமிருந்து, இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்துக்கு எந்த நலனும் கிடைக்காது என்கிறோம். அப்புரிதலை அடைந்தால் மட்டுமே இந்திய வருண அமைப்பையும் கலாச்சார மேலாதிக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

கலாசார மேலாதிக்கத்தை பற்றி அண்டோனியா கிராம்சி பேசுவதன் சாரம் இதுதான்: 'பல கலாசாரங்கள் வாழும் ஒரு சமூகத்தில், ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம் என்பது அச்சமூகத்தில் இருக்கும் நம்பிக்கைகளை தன் தேவைக்கேற்ப திரித்து அதையே அச்சமூகத்தின் கலாசாரமாக ஏற்க வைப்பதிலிருந்துதான் நிகழும்.'

ஆகவே மநு, வருண எதிர்ப்பு போன்றவற்றிலிருந்து மட்டுமே ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்துக்கான விடுதலை பிறக்க முடியும்!

banner

Related Stories

Related Stories