அரசியல்

இது உங்கள் பெருந்தன்மையால் அல்ல: மோடி கூறினாலும், கூறாவிட்டாலும் தமிழ் தேசிய மொழிகளில் ஒன்று தான்!

இந்தி, சமஸ்கிருத திணிப்பையே ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று 'தீக்கதிர்' தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

இது உங்கள் பெருந்தன்மையால் அல்ல: மோடி கூறினாலும், கூறாவிட்டாலும் தமிழ் தேசிய மொழிகளில் ஒன்று தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடி கூறினாலும், கூறாவிட்டாலும் தமிழ் தேசிய மொழிகளில் ஒன்று தான். இந்தி, சமஸ்கிருத திணிப்பையே ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று 'தீக்கதிர்' தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-

ஒன்றிய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தஞ்சையில் தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் இந்தியாவின் தேசிய மொழிகள் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார் என்றும், புதிய கல்விக்கொள்கையும் இதை நிரூபிக்கிறது என்றும் பேசியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேசிய மொழிகள் என்று கூறுவது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை போலவும், இதற்காகவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டிருப்பது போலவும், ஒன்றிய கல்வி அமைச்சர் பீற்றிக் கொள்கிறார்.

இந்தியாவின் ஒரே தேசிய மொழி இந்தி மட்டுமே என்ற பொய்யான தோற்றத்தை பாஜகவினர் அவ்வப்போது ஏற்படுத்த முயல்வதோடு, மொழித் திணிப்பிலும் மூர்க்கமாக ஈடுபடுகின்றனர்.

இந்திய ஒன்றியத்தை பொறுத்தவரை தனித்த தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. ஆனால் இந்தியாவில் அலுவல் மொழியாக இந்தியும், கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலமும் அங்கீ கரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு மொழிகளை மட்டுமின்றி அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய ஆட்சி மொழியாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவின் தேசிய மொழி எதுவாக இருக்க வேண்டும் என நீண்ட நெடிய விவாதங்கள் அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத் திலும், மக்கள் மன்றத்திலும் நடந்து வந்துள்ளன. இந்த விவாதத்தின் பின்னணியில்தான் இந்தி யாவுக்கு ஒற்றை ஆட்சி மொழி கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் 343ஆவது பிரிவின் படி இந்தியாவின் தேசிய மொழியாகவும், அதிகா ரப்பூர்வ ஆட்சி மொழியாகவும் இந்தியை மட்டும் திணிக்க முயற்சி நடந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த கிளர்ச்சி யின் காரணமாக ஆங்கிலமும் துணை2 அலுவல் மொழியாக தொடரும் என முடிவு செய்யப் பட்டுள்ளது. இதை மாற்ற அவ்வப்போது ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் 1950 ஆம் ஆண்டிலேயே அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதில் பிரதமர் மோடி கூறினாலும், கூறாவிட்டாலும் தமிழ் தேசிய மொழிக ளில் ஒன்றுதான். மறுபுறத்தில் இந்தி, சமஸ்கிருத திணிப்பையே ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் அதை மறைக்க ஒன்றிய அமைச்சர்களும், தமிழக ஆளுநர் போன்றவர்களும் முயல்வது பூசணிக்காயை காற்றில் மறைப்பது போன்றதே ஆகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories