அரசியல்

எலிசபெத் ராணி ஊர்வலத்தில் போராட்டம்.. ட்ரெண்டாகும் HASHTAG.. பிரிட்டனில் முடிவுக்கு வருகிறதா முடியாட்சி ?

பிரிட்டனில் அரச குடும்பத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எலிசபெத் ராணி ஊர்வலத்தில் போராட்டம்.. ட்ரெண்டாகும் HASHTAG.. பிரிட்டனில் முடிவுக்கு வருகிறதா முடியாட்சி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அவரின் இறுதி சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் கடந்த 19-ம் நாள் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமிலிருந்து 2000 உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். ராணியின் இறுதிப் பேரணியின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்தனர்.

எலிசபெத் ராணி ஊர்வலத்தில் போராட்டம்.. ட்ரெண்டாகும் HASHTAG.. பிரிட்டனில் முடிவுக்கு வருகிறதா முடியாட்சி ?

அப்போது பிரிட்டிஷ் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த ஒரு பக்கம் மக்கள் குவிந்த நிலையில், மற்றொரு பக்கம் அரச குடும்பத்தை எதிர்த்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் கையில் "என் அரசனில்லை" (புதிய அரசர் சார்லசை ஏற்கமறுத்து) என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர்.

இப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக்ஸ்போர்டை சேர்ந்த சைமன் ஹில் என்ற நபர் "யார் அவர்களை தேர்ந்தெடுத்தது?" என்று அரச குடும்பத்தை நோக்கி கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.

எலிசபெத் ராணி ஊர்வலத்தில் போராட்டம்.. ட்ரெண்டாகும் HASHTAG.. பிரிட்டனில் முடிவுக்கு வருகிறதா முடியாட்சி ?

கருத்து சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நாட்டில் எப்படி இப்படி ஒரு செயலை செய்யலாம் என பொதுமக்கள் சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ட்விட்டரில் #NotMyKing என்ற ஹாஷ்டாக ட்ரெண்டாகி வருகிறது. அதில் பதிவிடும் பெரும்பாலான மக்கள் பிரிட்டனை முடியாட்சியில் இருந்து குடியாட்சியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories